Type Here to Get Search Results !

பிறந்த நாள் வாழ்த்து இமேஜ்... Birthday Wishes In Tamil...

பறவை பறப்பதை மறக்கலாம்,
ரோஜா பூப்பதை மறக்கலாம்,
ஏன் பூமி சுற்றுவதைக் கூட மறக்கலாம்,
ஆனால்,
உங்கள் பிறந்த நாளை
எப்படி என்னால் மறக்க முடியும்..??!!

இன்று மலர்ந்த
கோடானுக் கோடி
மலர்கள் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பூக்களெல்லாம் பெருமை கொள்ளும் நாள் இன்று.
மலரொன்று புதிதாய் பூத்த நாள் இன்று.
வான் நிலவு ஒன்று மண்ணில் தோன்றிய
அதிசயம் நிகழ்ந்தது இன்று. 
உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

யார் சொன்னது குறிஞ்சி மலர் ஒரு முறை பூக்க
பண்ணிரண்டு வருடம் ஆகும் என்று?
வருடம் ஒரு முறை குறிஞ்சி மலராய் நீ பூக்கிறாயே..!!

பல உறவுகள் கண்ணில் விழுந்த தூசு போல விலகி விடும்.
சில உறவுகள் என்றும் கண் இமை போல சேர்ந்து இருக்கும்.
அத்தகைய உறவான என் உனக்கு
என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



Top Post Ad

Below Post Ad