Type Here to Get Search Results !

45+ புத்தம் புதிய காதல் கவிதைகள் ஸ்டேட்டஸ்

Love Quotes In Tamil | கண்கள் கவிதைகள் | வர்ணிப்பு கவிதைகள் | Tamil Romantic Love Quotes | Romantic Kavithai | காதலிக்கு கவிதைகள் | காதல் சிந்தனைகள்
100% புதிய காதல் கவிதை வரிகள் உங்களுக்காக!

பெண்ணே! பிரம்மன் வடித்த கவிதை நீ! உன்னை தினம் படித்து வர்ணிக்கும் கவிஞன் நான்!

1 of 45
வர்ணிப்பு கவிதை



தமிழ் பேசும் உன் உதடுகளில் விழுந்து விட்டேன்! கவி பேசும் உன் கண்களில் மயங்கி விட்டேன்! காவியம் படைக்க நினைத்து விட்டேன்! காதலை சொல்ல துணிந்து விட்டேன்! ...🌹ஐ லவ் யூ🌹...
2 of 45
Love You Kavithai Image


அந்த முழு நிலவின் உறவோ நீ! என் மதியை மயக்க வந்த இந்த முழு மதியின் துகளோ நீ! அன்று இரவில் வந்தாய், உறவை தந்தாய்! இன்று நிலவொளி தேடி அலைகிறேன் நான் தினம்!
3 of 45
Love Quote With Image Tamil


கனவில் கண்ட உன்னை நினைவில் தேடி பார்க்கிறேன்! கண்ட இடம் தெரியாமல் தினம் தேடி அலைகிறேன்! கனவுக்கும், நினைவுக்கும் இடையே!

4 of 45
Kadhal Kavithai image


ஆயுள் முழுவதும் அகதியாய் வாழவும் தயார், என் உறவே! என் தாத்தன் ஆண்ட இலங்கை பெண், உன் இதயம் என்றால்!
5 of 45
Srilanka Love Quote Tamil


விண்ணில் புள்ளி வைத்து ஆயிரம் நிலவுகள்! எனக்கு தெரிவதோ நெற்றியில் ஒற்றை புள்ளி வைத்த வட்ட நிலவு உன் முகம் மட்டுமே!
6 of 45
Tamil Love Quote With Picture


கண் விழிகள் அகல, புருவம் உயர்த்தி, நீ பார்க்கும் பார்வை, என் இதயத்தை பெயர்த்து, உன் இதயத்தில் வைக்கிறதடி!
7 of 45
கண்கள் காதல் கவிதை


"மணம்" வீசும் பூவே! உன் பார்வை என்னை தீண்டி செல்கையில், உன் பின்னால் செல்கிறதடி எந்தன் "மனம்"!
8 of 45
பார்வை காதல் கவிதை


முப்பொழுதும் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது வந்து செல்! என் வரண்ட உள்ளம் வசந்தம் ஆகும்! உன் வரவை கண்டு!
9 of 45
Kadhal Kavithai image


விரல்களின் இடைவெளியின் ரகசியம் அறிந்தேன், உன் விரல்கள் என் விரல்களுடன் இணைந்து பினைகையில்!
10 of 45
Romantic Tamil Love Quote


உன் விழிகளுக்கு மையிட்டு, என் விழிகளை மயக்கி விட்டாய்! உன் விழிகள் காண, என் விழிகள் தவிக்குதடி தினம்!
11 of 45
Kangal Kavithai Image


கண்மணியே! கண்ணால் பேசு இல்லை உதட்டால் பேசு! அசையும் உன் உதடுகளையும், சுழலும் உன் கண்மணிகளையும், ஒரேநேரத்தில் எதிர்கொண்டு பின் தொடர முடியவில்லை என்னால்!
12 of 45
Kankal Kavithai Image


மீனை பிடிக்க தூண்டில் போட்டேன், ஆனால், மீன்களே எனக்கு வலை வீசுகின்றன! என் இனியவளே உன் கண்கள்!
13 of 45
Kadhal Kavithai


நான் உன் காதலனடி, வித்தை காட்டும் உன் கண்களுக்கு காவலனடி காலமெல்லாம்!
14 of 45
கண்கள் கவிதை


பிடித்த உறவொன்று வாழ்க்கை துணையாக வந்து விட்டால், பிரிவும் இல்லை, பிரியங்களுக்கு குறைவும் இல்லை!
15 of 45
Kadhal Kavithai image


மனதில் சலனத்தை விதைத்தவளே! இதயத்துடிப்பை எகிற வைத்தவளே! என்னை மடிக்க பிறந்தவளே! இரவு முடியும் முன் வந்து விடு! உன் மடியில் மடியும் வரம் கொடு!
16 of 45
Love Quote With Picture Tamil


உன்னிடம் வம்பிழுத்து, வரம்பு மீற ஆசை! உன்னை கனவில் கண்டு, மனதில் சுமக்க ஆசை! விழி திறந்ததும் கண் முன் உன் முகம் காண ஆசை! கலையுமா இல்லை கைகூடுமா?
17 of 45
Love Proposal Quote Tamil


ஏக பொருத்தம் ஜோடி பொருத்தம்! உன் பொன்னிற கால்களுக்கு இந்த வெண்ணிற கொலுசு!
18 of 45
கொலுசு கவிதை


கண்கள் பார்ப்பது என்னமோ தொலைக்காட்சியை! ஆனால், மனதில் ஓடுவது என்னமோ தொலைவில் இருக்கும் உன் காட்சிகள்!
19 of 45
Tamil Kadhal Kavithai image


கண்களால் கவிதைகள் பேசி, எனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்(ள்)கிறது உன் விழிகள்!
20 of 45
Kankal Kavithai Image


என் அழகிய நினைவுகளும் நீ தான்! என் அழகிய கனவுகளும் நீ தான்! என் கற்பனையை கவிதைகள் படைத்திட தூண்டுபவளும் நீ தான்! தனிமையில் என் உள்ளம் சிரித்திட காரணமும் நீ தான்! என் இதயத்தை கொள்ளை கொண்ட அழகிய ஓர் இதயம்! என்னவளே! அது உன் இதயம் தான்! தான்!
21 of 45
Kadhal Kavithai image


பேசாமல் பேசும் ஓவியமே! எந்தன் காதல் காவியமே! என் உயிருக்குள் உயிராகி போனாய்! என் நினைவெல்லாம் நீயாகி போனாய்! நினைத்து நினைத்து மடிகிறேன்! நிஜமாகி வாழ்க்கை கொடு!
22 of 45
Love Quote Tamil


நினைவுகள் ஆயிரம் இதயத்தில்! கற்பனைகள் ஆயிரம் மனதினில்! தந்தவள் நீ! சுமப்பது நான்! நினைவுகள் நனவுகள் ஆகும் என்ற கனவுகளில்!
23 of 45
காதல் கவிதை


உடைந்து போன இதயத்தை நேசி! அது உன் இதயத்தை உயிராக உருகி நேசிக்கும்! உன்னை உலகமாக பாவிக்கும்!
24 of 45
Tamil Kadhal Kavithai image


அழகு என்ற சொல்லின் புது அர்த்தம் நீ, உன்னை கண்டபின் நான் உணர்ந்தேன் என் வாழ்வின் அர்த்தம்!
25 of 45
Kadhal Kavithai image


என் காதல் நிலவே! நான் தினம் காணும் கனவே! என் வீட்டு பௌர்ணமியாய் நீ தினம் ஜொலிக்க வேண்டும்! உன் வீட்டு வானமாய் நான் உனை தினம் சுமக்க வேண்டும்! வாராயோ! உறவொன்று தாராயோ!
26 of 45
Love Proposal Tamil Quote Image


உன்னை பற்றி கவிதை எழுதுகையில், முற்றுப்புள்ளி வைத்தாலும், வற்றாத நதி போல், சிந்தனை மீழ்கிறது, வரிகள் நீள்கிறது!
27 of 45
காதல் வரிகள்


இரண்டு மனங்கள் நேசிப்பது மட்டும் காதல் இல்லை! மணம் முடித்து மரணம் வரை மரணிக்காததே காதல்!
28 of 45
Unmai Kadhal Kavithai


காதல் என்பது இரண்டு உடல்கள் இணைவது பற்றியது அல்ல! அது இரண்டு இதயங்கள் இணைவது பற்றியது!
29 of 45
Tamil Quote About Love


எல்லோர் உள்ளத்திலும் உயிரோடு புதைக்கப்பட்ட உயிரோட்டமான ஒரு தாஜ்மஹால் நிச்சயம் இருக்கும்!
30 of 45
Taj Mahal Kadhal Kavithai


LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

Tamil Love Kavithai | Kadhal Kavithai | காதல் வரிகள் | Tamil Love Quotes


எந்த ஓசையும் இனிமையில்லை, உன் கை அசைவு வளையல் ஓசையின் முன்! எந்த இசையும் இனிமையில்லை, உன் காலடி கொலுசிசையின் முன்!
31 of 45
காதல் கவிதை ஸ்டேட்டஸ்


எனை கொஞ்சும் கவிதையே! எனை கெஞ்ச விடாமல் வந்து விட்டு செல்! நான் கொஞ்சம் கவிதை படைக்க!
32 of 45
Kavithai For Girlfriend


எனை கொல்லும் என் இனிய கவிதையே! எனை கெஞ்சவிடாமல் என் முன் வந்து விடு! நான் கவிதை படைக்க!
33 of 45
Love Quote For Girlfriend Tamil


என்ன மாயம் செய்தாயோ! என்னை கண்டு உன் இமைகள் படபடத்திட, பறந்து திரிந்த நான் சிறைப்பட்டு போனேன் உன்னிடத்தில்!
34 of 45
Tamil Love Quote For Lover


உன் ஒற்றை பார்வையில் முடிவு செய்தேன், என் முன்னுரையும் முடிவுரையும் நீ தான் என்று!
35 of 45
Kadhal Kavithai Picture


எல்லோருக்கும் நீ நல்லவள் தான், ஆனால், எனக்கு மட்டும் திருடி நீ, என் இதயத்தை, உன் கொள்ளை அழகில், எனை கொல்லும் அழகில், கொள்ளையடித்து சென்ற திருடி நீ!
36 of 45
அழகி கவிதை


நான் உறைந்து போக உந்தன் கண்கள் போதும்! நான் எனை மறந்து போக உந்தன் மடி போதும்!
37 of 45
Love Quote For Girlfriend Tamil


மேகத்தின் மீது ஏறி, காதல் கீதம் பாடி, விண்ணை தொட்டு, அழியா காதலுடன், காலம் வரை நாம் வாழலாம் காதலுடன்!
38 of 45
Kadhal Kavithai image


திரைப்படம் பார்க்க அலங்கரித்து தாயாரான உன்னை, முழு திரைப்படமாகவே கண்டு கழித்து கழி கொள்கிறது எந்தன் மனம்!
39 of 45
Kadhal Kavithai For Wife


உனக்காய் நான்! எனக்காய் நீ! நினைக்கையில் மனம் இனிக்குதே! உடலாய் நான்! உயிராய் நீ! கலப்பது புடிக்குதே! உனதுயிராய் எனதுயிரும் வாழ்ந்திட துடிக்குதே!
40 of 45
அழகிய காதல் கவிதை


இரவில் பூக்கும் நிலவைவிட, முப்பொழுதும் என் மனதில் பூத்துக்குலுங்கும் உந்தன் நினைவுகள் அழகானது! நினைவுகள் தரும் வேதனை சுகமானது!
41 of 45
Un ninaivugal Kadhal Kavithai


குழியை கண்டதும் திரண்டு ஓடும் நீரை போல்! உன்னை கண்டதும் என் கருவிழிகள் உருண்டு ஓடுகிறது உனை நோக்கி, எனதுயிரே!
42 of 45
Kadhal Kavithai image


பிரியமானவளே! பிரியாத வரம் வேண்டும்! இந்த மண்ணை விட்டு அல்ல! உந்தன் அழகிய மனதை விட்டு!
43 of 45
Kadhal Kavithai


காகிதம் காத்திருக்கிறது நம் பெயர் பொறிக்க! காலம் கனிந்து விட்டது நான் உன் கரம் பிடிக்க!
44 of 45
Tamil Kadhal Kavithai image


ஒளிரா வானம், சுற்றா கடிகாரம், ஆள் இல்லா சாலை, விடியா இரவு, முடியா முத்தம், மணம் நீங்கா மலர்கள், இவை அனைத்தும் வேண்டுகிறேன், மலரே உன்னை மணம் முடிந்து வாழப்போகும் மொத்த வாழ்க்கைக்கும்!
45 of 45
தமிழ் காதல் கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad