HomeGod Tamil Quote Image13 கடவுள் கவிதைகள் | God Tamil Quotes 13 கடவுள் கவிதைகள் | God Tamil Quotes Admin December 06, 2020 2 கடவுள் இருக்கிறாரா இல்லையாஎன்பது சந்தேகமாக இருந்தாலும்,கஷ்டம் வந்தவுடன் கடவுளேஎன்று தான் சொல்கிறது மனது.கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட,கடவுள் இருக்கிறார் என்று நம்பிஅவரிடம் சொல்வதே சிறந்தது. 1 of 13 என் கண்களுக்கு விருந்துபடைக்கும் கூத்தாடியை விட,என் வயிற்றுக்கு உணவுபடைக்கும் விவசாயி தான்எனக்கு கடவுளாவான். 2 of 13 பசித்த உயிருக்கு உணவளிப்பவன் கடவுள்.தன் பசி பொறுத்து பிறர் பசி ஆற்றுபவன் கடவுள்.கிடைத்ததை பகிர்ந்து உண்பவன் கடவுள்.பிறர் துயர் துடைப்பவன் கடவுள்.கடவுளை தேடாதே மனிதத்தை தேடு. 3 of 13 படைத்தவன் மட்டுமே கடவுள்இல்லை.மற்றவர் பசிக்காகஉழைப்பவனும் கடவுள் தான்.! 4 of 13 இறைவன் உனக்கென எழுதியதைஉலகமே சேர்ந்து தடுத்தாலும்,அது உன்னை வந்தடைந்தே தீரும்.இறைவன் உனக்கென எழுதாததைஉலகமே ஒன்று சேர்த்து உனக்கு கொடுக்கநினைத்தாலும் அது உனக்குக் கிடைக்காது. 5 of 13 எத்தனை தெய்வங்கள் பூமியில் இருந்தாலும்.!உன்னோடு பேசும் தெய்வம் உன் தாய் தந்தை மட்டுமே.!யோசித்து பார் உண்மை புரியும்.!அன்போடு அவர்களிடம் பேசி பார் பாசம் தெரியும்...! 6 of 13 இறந்த கடவுளை காண வேண்டும்என்றால் ஆலயம் செல்கிறோம்.வாழும் கடவுளை காண வேண்டும்என்றால் அனாதை இல்லம் செல்வோம்.அங்கே தான் உயிருடன் வாழ்கிறார் கடவுள். 7 of 13 கடவுள், கஷ்டம் என்ற புள்ளியைசின்னதா வச்சு,பிரச்சினை என்கிற கோலத்தைபிரம்மாண்டமா போடறார்,எல்லோர் வாழ்க்கையிலும். 8 of 13 என்னை படைத்த பரம்பொருளே..!நீ தூங்கும் போது பிறந்தவனோ நான்.கஷ்டம் மட்டுமே என் வாழ்க்கை ஆனது.இனியும் கஷ்டம் தாங்கும் சக்தி இல்லை.உன் ஆசை போல் அமையட்டும் என் வாழ்வு. 9 of 13 எதிர்பார்ப்பை கடவுள் மேல் வை.மனிதன் மேல் வைத்தால்,ஒரு நாள் ஏமாற்றம் நிச்சயம். 10 of 13 ஒருவரின் பசி என்ற நோய்உன்னால் நீங்கினால் நீ தான் கடவுளடா.ஒருவரின் வேலை இல்லா திண்டாட்டம்உன்னால் நீங்கினால் நீ தான் கடவுளடா. 11 of 13 நல்லது செய்தாலும்கெட்டது செய்தாலும்.சிரிப்பை மட்டுமேதிருப்பி கொடுக்கும்வரம் தா இறைவா.எனக்கே அந்த வரம்இன்னும்கிடைக்கவில்லை.உனக்கு எப்படி தருவதோ! 12 of 13 கடவுள் நம்பியவனுக்கு கசப்பு கொடுப்பார்நம்பாதவனுக்கு இனிப்பு கொடுப்பார்."ஆனால்"இறுதியில் கசப்பு மருந்தாகும்.இனிப்பு நோயாகும்...! 13 of 13 Tags God Tamil Quote Image Newer Older
🤔🤔🤔🤔arumaiyana pathivu🙏🙏🙏🙏
ReplyDeleteThe last Quotes is super
ReplyDeleteThanks For Your Comment...