HomeTamil Love Status Imagesதமிழ் காதல் கவிதைகள் - Best Kadhal Kavithaigal 2024 தமிழ் காதல் கவிதைகள் - Best Kadhal Kavithaigal 2024 Admin June 04, 2024 0 உன்னோடு சேர்ந்தேஇந்த உலகை ரசித்திட ஆசை.உன் பூ கரம் பிடித்தேஇந்த உலகை சுற்றிட ஆசை.உன் இன் முகம் பார்த்தேஅந்த நிலவை ரசித்திட ஆசை.உன் மடி சாய்ந்தேஎன்னை மறந்திட ஆசை💕💘. Kadhal Kavithaigal கண்கள் இமைக்க மறக்கிறது.இதயம் விரிந்து சுருங்குகிறது.யார் எண்ணையோகைபேசியில் தேடும் போது.உன் எண்ணை கண்டதும். என் இதய கதவுகள் உனக்காக திறந்தேயுள்ளது.என் விழி வீட்டினுள் நுழைந்துவிடு.ஏற்கனவே நுழைந்து விட்டாய்,உன் சம்மதம் இன்றி என் விழி வீட்டில்.நீ சம்மதம் தருவாயா.?கனவுலகில் நாம் இணைந்தே பயணிக்கலாம். எனக்கு அப்படி வாழ வேண்டும்இப்படி வாழ வேண்டும் என்றஆசை எல்லாம் இல்லை.ஒற்றை ஆசை தான்! வாழ்ந்தால்!உன்னோடு வாழ வேண்டும்💕...! எல்லை கடந்த பயங்கரவாதம்உன் கண்கள் செய்கிறதே.தொல்லை கொடுத்து,தூக்கம் துரத்தி, என் உயிரைமெதுவாய் கொய்கிறதே. வண்ணம் மாறா மயிலிறகாய்.என் எண்ணமெல்லாம் நிறைந்தவளே!வருடுகிறாயே என்மனதை உன் நினைவுகளால்! இரும்பு சிறையில் இருந்துகூடஎளிதில் தப்பி விடுவேன்.ஆனால் அவள் விழி சிறையில்இருந்து தப்பிக்க முடியவில்லை. தமிழ் காதல் கவிதைகள் காதல் என்னும் கடலில் கரைஅறியாது தத்தளிக்கிறேன்.என் அன்பு காதலியே கலங்கரைவிளக்காக கரை சேர வழிகாட்டு! என்னை வதைத்து சிதைக்கிறது.உரையாடலின் போதுநீ சொல்லும் "ம்ம்ம்" "ம் ஹும்"என்ற பதில்கள். கண்ணில் தெரியும் நவரசம்.கைகள் பிடிக்கும் அபிநயம்.இதழில் ஊறுது கனிரசம்.ஏனடி நடையில் அவசரம்.வேண்டும் உன் மலர் கரம்.பெற்றிடத்தானே என் தவம். பெண்களுக்கு அழகு வீரமாம்!அது எப்படி சாத்தியமாகும்?உன் கண்கள் என்னும் தூண்டில்விழுந்து விட்டால்!மாவீரனும் மண்டியிட்டு தானேஆகவேண்டும்! அதென்னவோ தெரியவில்லை!உன்னைக் காணாத போதுசொல்லுவதற்கு காவியம் படைக்கிறேன்.கண்டுவிட்டால் தமிழின் முதல் எழுத்தும் மறக்கிறேன்! பகல் கொள்ள என்பது இதுதானோ.இத்தனை கவனமாக இருந்தஎன் இதயத்தை,பட்ட பகலில் திருடிவிட்டாய்யடி நீ. என் காதலை மட்டும்நீ சுமந்தால் போதும்.உன்னை என்றும்நான் சுமப்பேன்என் உயிராக. நான் ஒன்றும் கவிஞன் இல்லை.உன்னை பார்த்த பின்பு தான்ஏனோ இப்படி ஆகி விட்டேன்🖋️. LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...