15 வாழ்க்கை கவிதை ஸ்டேட்டஸ்

உன் கவலைகளை உன்னை
படைத்தவனிடம் மட்டும் சொல்.
அவன் மட்டும் தான் அதை
அடுத்தவனிடம் சொல்லி சிற்றின்பம்
அனுபவிக்க மாட்டான்.
1 of 15
Tamil god status

உன்னை நம்பியவரை ஏமாற்றுவதற்கு
பெயர் திறமையோ தந்திரமோ இல்லை.
அதற்கு பெயர் துரோகம், நம்பிக்கை துரோகம்.
கொலையினும் கொடியது.
2 of 15
துரோகம் ஸ்டேட்டஸ்

நல்லவருடன் பழகினால் ஏமாற்றாமல்
இருக்க கற்றுக்கொள்வாய்.
கெட்டவருடன் பழகினால் ஏமாறாமல்
இருக்க கற்றுக்கொள்வாய்.
3 of 15
Tamil life quote image

முக்கியத்துவம்:
நாம் முக்கியம் என நினைப்பவர்
தருவதில்லை. அதனால்,
முக்கியத்துவம் முட்டால் தனம்
ஆகிவிடுகிறது.
4 of 15
முக்கியத்துவம் கவிதை

எல்லாம் அறிந்த புரிந்து வாழ்பவன்
நிம்மதியிழந்து தவிக்கிறான்.
எதுவும் அறியாமல் புரியாமல்
வாழ்பவன் நிம்மதியாக வாழ்கிறான்.
5 of 15
Valkkai status

நாம் விலங்குகளுக்கு ஐந்தறிவு
என்று எண்ணுகிறோம்.
அவை மனிதர்களுக்கு அறிவே இல்லை
என்று எண்ணினாலும் எண்ணலாம்.
6 of 15
Man vs animal tamil quote

ஒருவன் அடைந்ததை கண்டு
பொறாமை கொள்ளாதே.
அதற்கு அவன் இழந்தவை
அறிந்தால், அதை அடையும்
ஆசையே அழிந்து போகலாம்.
7 of 15
Tamil life status

நம்மை பற்றி நம்மை விட அதிகம்
அறிந்தது போல் பேசுகிறது சுற்றம்.
அதை அப்படியா என்று கேட்டு
அப்படியே நம்புகிறது முற்றம்.
8 of 15
Ulagam Kavithai

மனதில் பட்டதை பேசுவதில்
தவறில்லை தான். ஆனால்,
அடுத்தவருக்கும் மனம் உண்டு
என்பதை புரிந்து பேசுங்கள்.
9 of 15
Tamil status


உன்னை பற்றி ஒருவன் மனதில்
இன்னொருவன் விதைத்த விதை
ஆழமாக இருக்கும் வரை.
நீ சொல்வதை புரியும் பக்குவம்
அவனுக்கு வருவதில்லை.
நீ பக்குவமா கடந்து நடந்து விடு.
10 of 15
Tamil quote image

நல்லவர்கள் யாரையும்
தரம் தாழ்த்தி விமர்சிப்பதில்லை.
தரம் கெட்டவர்கள் யாரையும்
விமர்சிக்காமல் விடுவதில்லை.
11 of 15
Tamil Quote image

அனுபவம் என்பது,
வயதை கடந்த பின் வருவதல்ல.
வலியை கடந்த பின் வருவது.
12 of 15
Tamil quote image

மாற்றம், ஏமாற்றம், துரோகம்
இவைகளால் வலியை அனுபவித்து,
பலமுறை மனதால் இறந்த பின்பு தான்
மரணம் வருகிறது இறுதியில், மனிதனுக்கு.
13 of 15
மரணம் ஸ்டேட்டஸ்

என்ன பிரச்சனை வந்தாலும்
சிரிக்கத்தான் தோன்றுகிறது.
இதுக்கு பெயர் பக்குவமா இல்லை
சூடு சொரண இல்லாத நிலையா?
எதுவா இருந்தா என்ன நாம்
சிரித்துக் கொண்டே இருப்போம்.
14 of 15
Dp image in tamil

துன்பம் மட்டுமே வாழ்க்கை ஆனபின்,
துன்பம் கூட இன்பமாகி போனதடா.
இனி கல்லால் அடித்தாலும்,
சொல்லால் அடித்தாலும்,
எனக்கொரு கவலையும் இல்லையடா.
15 of 15
Tamil status dp

Related Posts

0 Comments to "15 வாழ்க்கை கவிதை ஸ்டேட்டஸ்"

Post a Comment

Thanks For Your Comment...