Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 106 - இரவு - ஸ்டேட்டஸ்

*குறள் 1051:* இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. *சாலமன் பாப்பையா உரை:* ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

Thirukkural 1051

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1052:* இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். *சாலமன் பாப்பையா உரை:* நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

திருக்குறள் 1052

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1053:* கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து. *சாலமன் பாப்பையா உரை:* ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

Thirukkural 1053

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1054:* இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. *சாலமன் பாப்பையா உரை:* ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

திருக்குறள் 1054

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1055:* கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. *சாலமன் பாப்பையா உரை:* கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

Thirukkural 1055

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1056:* கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். *சாலமன் பாப்பையா உரை:* இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

Thirukkural 1056

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1057:* இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து. *சாலமன் பாப்பையா உரை:* அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

Thirukkural 1057

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1058:* இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. *சாலமன் பாப்பையா உரை:* பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

திருக்குறள் 1058

காலை வணக்கம் திருக்குறள்


*குறள் 1059:* ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. *சாலமன் பாப்பையா உரை:* தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?

திருக்குறள் 1059

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1060:* இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. *மு.வ உரை:* இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

Thirukkural 1060

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad