Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 85 புல்லறிவாண்மை ஸ்டேட்டஸ்

*குறள் 841:* அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. *சாலமன் பாப்பையா உரை:* இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

Thirukkural 841

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 842:* அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். *சாலமன் பாப்பையா உரை:* அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

Thirukkural 842

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 843:* அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. *கலைஞர் உரை:* எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

Thirukkural 843

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 844:* வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. *கலைஞர் உரை:* ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

Thirukkural 844

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 845:* கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். *சாலமன் பாப்பையா உரை:* அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.

Thirukkural 845

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 846:* அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. *கலைஞர் உரை:* நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

Thirukkural 846

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 847:* அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. *கலைஞர் உரை:* நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

Thirukkural 847

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 848:* ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். *கலைஞர் உரை:* சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

Thirukkural 848

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 849:* காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. *சாலமன் பாப்பையா உரை:* அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

Thirukkural 849

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 850:* உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். *சாலமன் பாப்பையா உரை:* இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

Thirukkural 850

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad