Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 87 பகை மாட்சி ஸ்டேட்டஸ்

*குறள் 861:* வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. *கலைஞர் உரை:* மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.

Thirukkural 861

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 862:* அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. *கலைஞர் உரை:* உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

Thirukkural 862

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 863:* அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. *கலைஞர் உரை:* அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

Thirukkural 863

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 864:* நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. *மு.வ உரை:* ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

Thirukkural 864

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 865:* வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. *கலைஞர் உரை:* நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

Thirukkural 865

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 866:* காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். *மு.வ உரை:* ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

Thirukkural 866

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 867:* கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. *மு.வ உரை:* தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

Thirukkural 867

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 868:* குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனாம் ஏமாப் புடைத்து. *கலைஞர் உரை:* குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

Thirukkural 868

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 869:* செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். *கலைஞர் உரை:* அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

Thirukkural 869

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 870:* கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. *மு.வ உரை:* கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

Thirukkural 870

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad