Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 84 பேதைமை ஸ்டேட்டஸ்

*குறள் 831:* பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல். *லைக்மைஸ்டேட்டஸ் உரை:* அறியாமை என்பது யாதெனில்: அறியாமல், புரியாமல், தெளியாமல், நன்மையை விடுத்து தீமையை ஏற்பது.

திருக்குறள் 831

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 832:* பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். *மு.வ உரை:* ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

Thirukkural 832

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 833:* நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். *சாலமன் பாப்பையா உரை:* தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

Thirukkural 833

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 834:* ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல். *சாலமன் பாப்பையா உரை:* படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

Thirukkural 834

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 835:* ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. *கலைஞர் உரை:* தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.

Thirukkural 835

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 836:* பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். *சாலமன் பாப்பையா உரை:* செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

திருக்குறள் 836

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 837:* ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. *கலைஞர் உரை:* அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

Thirukkural 837

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 838:* மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். *கலைஞர் உரை:* நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

Thirukkural 838

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 839:* பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். *மு.வ உரை:* பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

Thirukkural 839

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 840:* கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். *சாலமன் பாப்பையா உரை:* சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

Thirukkural 840

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad