Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 73 அவை அஞ்சாமை ஸ்டேட்டஸ்

*குறள் 721:* வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். *கலைஞர் விளக்க உரை:* சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

Thirukkural 721




*குறள் 722:* கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். *கலைஞர் விளக்க உரை:* கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Thirukkural 722



*குறள் 723:* பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர். *கலைஞர் விளக்க உரை:* போர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

Thirukkural 723



*குறள் 724:* கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல். *மு.வ விளக்க உரை:* கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

Thirukkural 724



*குறள் 725:* ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. *கலைஞர் விளக்க உரை:* அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

Thirukkural 725



*குறள் 726:* வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. *கலைஞர் விளக்க உரை:* கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.



*குறள் 727:* பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

Thirukkural 727



*குறள் 728:* பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

Thirukkural 728



*குறள் 729:* கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

Thirukkural 729



*குறள் 730:* உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

Thirukkural 730


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad