தத்துவம் மற்றும் பொன்மொழிகள் | New Tamil Ponmozhigal
Wednesday, December 30, 2020
புகைந்து கொண்டிருக்கும் அடுப்பு,
எரிந்து கொண்டிருக்கும் வயிற்றை,
அணைக்க போராடிக் கொண்டிருக்கிறது.
பழுக்கக் காய்ச்சிய இரும்பு தான்
பட்டை ஆகிறது..!
பட்டுத் தேறிய மனம் தான்
பக்குவப் படுகிறது..!
பக்கத்து வீட்டு பிரியாணி வாசம்,
பசியை தூண்டலாம்.
நம்ம வீட்டு பழைய கஞ்சி தான்
பசியை ஆற்றும்.🤔🤔
அடுத்தவனிடம் உள்ள
ஆயிரம் ரூபாயை விட,
உன்னிடம் உள்ள
ஒரு ரூபா தான் உனக்கு
நம்பிக்கையை தரும்...!
...::நினைவில் கொள்::...
வெறும் கையாகும்
அளவிற்கு
தர்மம் செய்யாதே.
தோல்வி என்பது:
நாம் தேடாமல் கிடைக்கும்.
வெற்றி என்பது:
நாம் தேடினால் மட்டுமே கிடைக்கும்.
பல் வலி வந்தால் தெரியும்.
சொல் வலி கேட்டால் புரியும்.
பாம்பின் விஷத்தையும்
மிஞ்சும் நாக்கின் விஷம்.
மனநோய்க்கு காரணம்:
மனது அல்ல.
சில மனிதர்கள் தான்.
வலியும் வேதனையும்
சொன்னால் தெரியாது.
பட்டால்தான் புரியும்.
விசமும் வேசமும் ஒன்று தான்.
விஷம் உயிரை கொல்லும்.
வேசம் மனதைக் கொல்லும்.
சேர்த்து போகாத வண்டி மாடும்,
சோர்ந்து போன மனமும்,
ஒருபோதும் சேர்த்து பயணிக்காது.
துன்பத்தில் இருந்து துள்ளி
எழ பழகிக் கொண்டால்,
இன்பம் இதமாக வந்தடையும்.
வேகம்:
எதிர்பாராத முடிவை தரும்.
விவேகம்:
எதிர்பார்ப்பை முடிவாய் தரும்.
கலங்கிய நேரத்திலும் கலங்காமல் செயற்பட்டால்.
கலங்கிய குளத்திலும் தெளிவான நீர் கிடைக்கும்.
வாழ்க்கையில்
எதிர்த்து நிற்கலாம்.
ஆனால்,
எதிர்பார்த்து நிற்க கூடாது.
தொலைந்து போன
பித்தாளையைத் தேடி.
உன் கையிலிருக்கும்
தங்கத்தையும்
தொலைத்து விடாதே.
வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே.
வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே.
தத்துவங்களை படிப்பதால்
வாழ்க்கை மாறப் போவதில்லை.
அதை செயல்படுத்தும் போது தான்
வாழ்க்கை மாற்றம் பெறும்.
0 Comments to "தத்துவம் மற்றும் பொன்மொழிகள் | New Tamil Ponmozhigal"
Post a Comment
Thanks For Your Comment...