Type Here to Get Search Results !

11 வாழ்க்கை சோகக் கவிதைகள் | Tamil Sad Quotes For Life

என் அதீத ஆசையெல்லாம்,
என் மனம் கஷ்டப்பட்டும் போது.
என் வார்த்தையை கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே.
1 of 11

ஒரு துளி அன்பை தந்து விட்டு,
பல துளி கண்ணீரை
கறந்து விடுகிறது.
போலியான சில உறவுகள்...!
2 of 11

எட்டி உதைக்கிறது காலம், எட்டி
பார்க்கிறது துயரம். திடீரென வலிக்கிறது.
வலியை மறைத்து ஒரு நொடி சிரித்தால்,
அடுத்த நொடி வந்து விடுகிறது சோதனை.
என்னடா வாழ்க்கை இது...!
3 of 11

வலி கண்ணீரில் மட்டுமே
இருப்பதில்லை. சில நேரம்
சிரிப்பிலும் மறைந்திருக்கும்.
4 of 11

ஆசையில் தொடங்கிய வாழ்க்கை.
ஆசை தகர்ந்து, இது பேராசையோ!
என எண்ண வைத்து
நிராசையில் முடிகிறது வாழ்க்கை.!
5 of 11

வெளியே காண்பிக்க முடியாத
காயங்கள் ஏராளம் என்னுள்.
அழுது தீர்ப்பதா இல்லை,
அனுஅனுவாக அனுபவித்து சாவதா.
6 of 11

என் காயங்களை கவி வடித்தால்
கவியும் காயப்படும்.
என் வலிகளை வரி வடித்தால்
வரியும் வலி கொள்ளும்.
7 of 11

வெளியே சிரிப்பது
தெரிந்தவர்களுக்கு.
உள்ளே சிதைபட்டு
சிறைபட்டு கிடப்பது
தெரியவில்லை ஏனோ...!
8 of 11

எழுத்துக்களை கோர்வையாக்கி
காயங்களை கவிதைகளில் கரைத்தாலும்.
வரிகளில் சொல்லமுடியாத வலிகள்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ளது.
9 of 11

என் வலிகளை வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் இங்கு தினமும்.
இந்த கிறுக்கனின் கிறுக்கல்
ஓர்நாள் ரசிக்கப்படாலாம்!
என்ற நம்பிக்கையில்..!
10 of 11

என் பாதைகள் எல்லாம்,
கண்ணீர் நிரம்பியவை.
என் கவிதைகள் எல்லாம்,
சோகம் ததும்பியவை.
நான் இனி வாழ வேண்டியது,
கல்லறை செல்லும் வரை.
11 of 11
Sad tamil life quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad