Tamil Love Quote Image | Kadhal Kavithai Image | Tamil Quote About Love | Kavithai For Girlfriend | காதல் கவிதை இமேஜ் | Tamil Love Status Image | கண்கள் கவிதை
என் காதலியே! நட்சத்திரங்கள்
எப்படி வந்தது தெரியுமா?
உன் தலையில் இருந்து உதிர்ந்த
மல்லிகை பூக்களை எடுத்து
வானத்தில் எறிந்தேன்.
அவை அப்படிய நின்றுவிட்டன
🌟🌟நட்சத்தித்திறங்களாய்.🌟🌟
1 of 21
உனக்காய் காத்திருப்பது
என் கண்கள் மட்டுமல்ல.
என் இதயமும் தான்!
கண்கள் உன் முகத்தை தேடி!
என் இதயம் உன் அன்பை தேடி!
என்றும் நேசத்துடன் நான் உனக்காய்!
2 of 21
என் அன்புக்கு அடிமை ஆனவர் ஆயிரம்.
நான் அடிமை ஆன ஒர் அன்பு,
அது உன் அன்பு மட்டுமே.
3 of 21
நான் உயிரோடு இருந்தால்
அது உன்னோடு.
உயிரற்று கிடந்தால் அது மண்ணோடு.
இவ்வளவுதான் எனது வாழ்வு.
4 of 21
கண்களால் கொலை செய்ய முடியும்
என்பதை உன் பார்வையில் அறிந்தேனடி.
உன்னை அறியாமல் தினம்
என் இதயத்தை கொய்து
செல்கிறாய் உன் பார்வையால்!
5 of 21
எண்ணத்தில் நீ இருக்க,
வண்ணத்தில் மழை பெய்ய கண்டேன்.
துளிகள் எங்கும் உன் சாயல்.
எண்ணம் எங்கும் நம் காதல்.💕
6 of 21
தொடர்ந்தாலும் முடிந்தாலும் என்
பயணம் என்றும் உன்னோடு தான்.
வாழ்ந்தாலும் மறைந்தாலும் என்
வாழ்க்கை என்றும் உன்னோடு தான்.
7 of 21
நீ தொட்ட மழைத்துளி
எல்லாம் அமிர்தம்.
உன்னைத் தொட்ட
மழைத்துளி எல்லாம் புனிதம்.
8 of 21
காத்திருப்புகள் கூட காத்திருக்க
ஆரம்பித்து விட்டது.
நீ என்னை கடந்து போகும்
🤵கண நேர💘நிகழ்வுக்காக👸.
9 of 21
மழை பெய்தால் தான்
மண் - வாசம் - வீசும்.
உன்னை நினைத்தாலே என்
மனதில் பூவாசம் வீசுது ஏனோ?
10 of 21
என்னை அழ வைப்பது
நீயாக இருந்தும்.
என் இதயம் என்னவோ
உன் இதயத்தையே தேடுகிறது.
11 of 21
நினைவுகளோடு வாழ்வதற்கு
பலபேர் இருந்தாலும்!
நிஜத்தில் வாழ்வதற்கு
நீ மட்டும் போதும்.
எங்கடி இருக்கா
அடி எங்கதான் இருக்கா
எனக்கென்னு பொறந்தவளே.
12 of 21
விதி விளையாடி கேள்வி பட்டிருக்கிறேன்.
விழி விளையாடி இப்போது தான்
பார்க்கிறேன். நீ என்னை கடக்கும் போது
உன் விழிகள் என்னை கடத்துகிறதடி.
13 of 21
பிரம்மன் வரைந்த ஓவியத்தில்
வடித்த காவியம் உன் கண்கள்.
14 of 21
எத்தனை முறை எழுதினாலும்.
என்ன எண்ணி எழுதினாலும்.
சலிக்காமல் இருப்பது!
உன்னை பற்றிய கவிதை!
உன் கண்ணை பற்றிய கவிதை!
15 of 21
மை இல்லா பேனாவும்
கவிதை எழுதும்.
நீ கண் சிமிட்டினால்
உன் கண் மை எடுத்து.
16 of 21
தொலைந்து போக ஆசைதான்.
உன் கண்கள் என்னை தேடும் என்றால்.
மீண்டும் பிறக்க ஆசைதான்.
நீ என் கரம் பிடிப்பாய் என்றால்.
17 of 21
விளக்கு ஏற்றுவது வீட்டுக்கு வெளிச்சம்.
அதை நீ ஏற்றுவது அந்த விளக்கிற்கே வெளிச்சம்.
என் வீட்டில் விளக்கேற்ற வாராயோ?
என் வாழ்க்கையை வெளிச்சமாக்க.
18 of 21
கடந்து போகும் பெண்ணை
ரசிப்பது காதல் இல்லை.
கடைசிவரை கைகோர்த்து
நடந்து வரும் பெண்ணை
ரசிப்பது தான் காதல்.
19 of 21
காதல் என்பது புனிதம் தான்.
காதலர்கள்
புனிதமான முறையில்
காதலிக்கும் வரையில்.
20 of 21
உன் கேசத்தில் கலைந்து,
தேகத்தில் தவழும்,
ஒற்றை முடி சொல்லும்,
ஆயிரம் கவிதைகள்.
21 of 21
LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com
Thanks For Your Comment...