மாறாத மனதோடும்! மறக்காத நினைவோடும்! மறையாத காதலோடும்! மரணம் வரை உனக்காகவே தொடரும் என் வாழ்வின் பயணம்!
உன் இதயம் மொத்தமும் குத்தகை எடுத்திட, இந்த உலகம் மொத்தமும் யுத்தம் நடத்திடுவேன் நான்.
என்னை நேசிக்க என் அருகில் நீ இருந்தால், நான் யோசிக்க எதுவும் இல்லை இந்த உலகில்.
வாழ்நாள் அதிகம் தேவையில்லை. உன்னுடன் வாழ்ந்த நாட்கள் அதிகம் இருந்தால் போதும்.
என் சோகங்கள் அனைத்தும் சுகமாகிறது. நான் உன் மடி சாய்ந்து, நீ என் தலை கோதும் போது.
காதலில் கவிதைகள் பல உண்டு. அந்த கவிதைகள் மேல் எனக்கு கொஞ்சம் காதலும் உண்டு. அந்த காதலை மிஞ்சும் என் மேல் காதல் கொண்ட ஓர் அழகிய கவிதையும் எனக்குண்டு உன் உருவில்.
வருடிச் செல்லும் உருவமில்லா காற்றைப் போல், உருவமில்லா உனதன்பில் மிதந்து திரிகிறேன். தேடியும் கிடைக்காவிடில், கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை நான்.
பல கோடி இதயங்கள் சுவாசித்தும் மீதமிருக்கும் காற்றைப் போல, எவ்வளவு எழுதியும் மீதமிருந்து கொண்டு தான் இருக்கிறது. உன் மீதான என் காதல்.
பேச்சின் முடிவில் நீ ஒற்றை புள்ளி வைக்க நினைக்கும் போதெல்லாம், நான் ஒற்றைக் காலில் தவம் செய்கிறேன்.
காதல் பாதியில் முறிந்தாலும், தோல்வியில் முடிந்தாலும், காதல் தந்த நினைவுகள் என்றும் மறந்திட முடியாதவை.!
அடைமழைப் போல்! விடாது உன்னை நினைப்பதால்! சேதம் சற்று அதிகம்தான் என் இதயத்திற்கு!
நேரம் கிடைத்தால் நினைத்துப்பார். நேரில் வரவில்லை என்றாலும் நினைவில் வருவேன்.
உன்னை கண்டால் கனவு வரும்! காணாவிட்டால் நினைவு வரும்! நீ இருந்தால் துணிவு வரும்! இல்லாவிட்டால் சரிவு வரும்! நீ சிரித்தால் விடியல் வரும்! சிரிக்காவிட்டால் என் முடியல் வரும்!
அடியே! திட்டம் தீட்டி தாக்குது, உன் சிரிப்பு! எனை கட்டம் கட்டி தூக்குது, உன் பார்வை! அம்பு தாக்குதலை நிறுத்தி விடு! அன்பால் எனை அணைத்து விடு!
மோதுவது உன் விழிகள் தான்👁️, அதில் உடைவதோ என் இதயம்❤️. சிரிப்பது உன் உதடுகள்💋. அதில் சிதைவதோ என் மனம்💘.
தண்டனை இல்லாத சிறை உன் இதயம். அதில் தப்பிக்க நினைக்காத ஆயுள் கைதி நான்.
அன்பே வைத்தியம் பார்ப்பது நீ என்றால், நான் பைத்தியம் ஆகவும் தயார்... தயார்...!
உன்னை கண்ட கண்களை கண்டித்தேன். உன்னோடு பேசிய உதடுகளை தண்டித்தேன். உன்னை சுமந்து உனக்காக வாழும் என் இதயத்தை என்ன செய்வதோ.
மழை அழகு மழைத்துளி அழகு என்கின்றனர்! எனக்கு என்னமோ அவைகளை விட, அந்த மழையில் நீ ஒரு கையில் குடையையும், ஒரு கையில் முந்தானையையும் பிடித்தபடி, என்னை கடந்து செல்வது தான் அழகு!
அன்பு என்னும் தூண்டிலில் அகப்பட்டு, நேசம் எனும் கடலில் நீந்தி, கவலை மறந்து இன்புற செய்வதே காதல்.
மூச்சுக்காற்று போல ஒவ்வொரு நொடியும் என் மனதை வருடிச்செல்கிறது உன் நினைவலைகள்.
பருவத்தால் ஏற்படும் மாற்றம் அல்ல காதல், காலத்தால் ஏற்படும் புரிதலின் உச்சம் தான் காதல்.
மழை துளிகளும் உன் நினைவு துளிகளும் ஒன்று தான், சட்டென வந்து பட்டென வருடி செல்கிறது.
சேர்ந்து வாழ ஒரு காதல் இல்லை என்றாலும், நினைத்து வாழ ஒரு காதல் வேண்டும்!
அழ வைக்கும் இரவு கூட அழகாகத் தெரிகிறது. அழுவது நானாக இருந்தாலும், அதில் வருவது உன் நினைவுகள் என்பதால்.
இரவுக்கு முழுமதி அழகாம்! என் இரவுக்கு என் ரதி நீயே அழகு என்றும்!
தேவதை என்றால் இறக்கைகளுடன் விண்ணில் பறக்கும் என்று யார் சொன்னது! இறக்கை உடைந்த என்னை மீட்டு இறக்கை கொடுத்து மீண்டும் பறக்க செய்த என் தேவதை இந்த மண்ணில் தான் உள்ளது!
கனவுகளில் மிதக்கிறேன், என் காதலியே உன் கரம் பிடிக்க! கவிதைகள் வடிக்கிறேன், என்னவளே உன் இதயத்தில் இடம்பிடிக்க!
தலை சாயும் இடமெல்லாம் உன் மடியை தேடுகிறேன். தனிமையை உணரும் நேரங்களில் உன் நினைவுகள் இதமாக இசைக்கிறது. உன்னில் தொடங்கிய என் காதலுக்கு உன் நினைவுகள் தான் வெகுமதி போலும்!
வாழ்வின் தேவைகள் மாறலாம்! ஆனால், இதயத்தின் தேடல் எப்போதும் அன்பு ஒன்றே!
Thanks For Your Comment...