11 இராமகிருஷ்ணர் பொன்மொழிகள் | Ramakrishna Quotes In Tamil

விறகில் தீ இருப்பதை
உணர்ந்தவன் ஞானி.
அதில் தீ மூட்டி உணவு
சமைத்து சாப்பிட்டவன்
விஞ்ஞானி.
1 of 11
Ramakrishna Tamil Quote

ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும்
என்றால், ஒரு நல்ல பழக்கத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு தீவிரமான முயற்சி தேவை.
2 of 11
Tamil Inspiration Quote

கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல,
பல திசைகளிலும் ஓடும் மனதை
ஒரு நிலைப்படுத்துவது எளிதன்று.
ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.
3 of 11
மனம் கவிதை

மனிதர்கள் புகழ்வதும் விரைவு,
இகழ்வதும் விரைவு. எனவே:
மற்றவர்கள் உன்னைப் பற்றிச்
சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.
4 of 11
Ramakrishna Tamil Ponmozhigal

முற்பிறவியில் நடந்து
கொண்டதற்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம்
நடக்கிறது.
ஏதோ திடீரென
நடப்பதாக மக்கள்
நினைக்கிறார்கள்.
5 of 11
Ramakrishna Quote in Tamil

உன்னிடம் தீவிர நம்பிக்கை
இருக்குமானால்,
நீ மனமுருகித் தேடும் பொருள்
உனக்கு கிடைத்தே தீரும்.
6 of 11
Motivational quote in tamil


வேலை செய்வது நல்லது.
அது மனதை பண்படுத்துகிறது.
ஆனால்,
பலன் கருதாமல் செய்ய வேண்டும்.
7 of 11
Ramakrishna Tamil Quote

ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.
அதுபோல் உலக ஆசை
கொண்டவனுக்கு
கடவுள் அருள் கிடைக்காது.
8 of 11
Ramakrishna Tamil Thathuvam

ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது.
அதை எவராலும் அசைக்க முடியாது.
9 of 11
Ramakrishna Tamil Thathuvam

வண்டு தேன் மலரைத் தவிர வேறு
எதன் மீதும் உட்காராது. அதுபோல,
உண்மையான துறவி இறை
ஆனந்தத்தைத் தவிர வேறு
ஆனந்தங்களை ஏற்றுக்
கொள்ளமாட்டான்.
10 of 11
Ramakrishna Tamil Quote

அறிவு பலவீனமானது,
நம்பிக்கை பலமானது.
11 of 11
ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்

Related Posts

0 Comments to "11 இராமகிருஷ்ணர் பொன்மொழிகள் | Ramakrishna Quotes In Tamil"

Post a Comment

Thanks For Your Comment...