Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 120 - தனிப்படர் மிகுதி - ஸ்டேட்டஸ்

குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி மு.வ உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

Thirukkural 1191

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1192: வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி மு.வ உரை: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

திருக்குறள் 1292 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1193: வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு மு.வ உரை: காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

Thirukkural 1193

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1194: வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் மு.வ உரை: தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

Thirukkural 1194

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1195: நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை மு.வ உரை: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

Thirukkural 1195

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1196: ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது மு.வ உரை: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

திருக்குறள் 1196

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1197: பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் மு.வ உரை: (காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

Thirukkural 1197

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1198: வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் மு.வ உரை: தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

Thirukkural 1198

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1199: நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு மு.வ உரை: யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

திருக்குறள் 1199

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1200: உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு மு.வ உரை: நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

Thirukkural 1200

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad