Type Here to Get Search Results !

30 தன்னம்பிக்கை கவிதை வரிகள்

எதிரே நிற்கும் எதிரியையும் எதிர்த்து நிற்கும் வீரம் இருக்கும் போது, கண்ணுக்கு தெரியாத துன்பத்தை நினைத்து துவண்டு போவது ஏனோ!

தன்னம்பிக்கை கவிதைகள்

கத்தி என்று தெரிந்தாலும் துணிந்து கால் வை. போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடு. காலம் உன் கை பிடியில். வெற்றி உன் காலடியில்.

சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தேடும் சாவி போன்றது தான் வாய்ப்புகளும்.

உயரத்தை அடைய நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை உங்கள் மேல் இருப்பது அத்தியாவசியம்.

உழைக்கவும், உழைப்பின் பலனுக்காக உழைத்துக் கொண்டே காத்திருக்கவும் கற்றுக் கொண்டால், காலம் உழைப்பின் பலனை கைகளில் கொடுக்கும்.

தன்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ள மனிதன், தன் முயற்சியை நாடுவான். அடுத்தவர் உதவியை நாடுவதில்லை.

Motivational quote image tamil


வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல. அவை நாளைய எழுச்சியின் அடித்தளங்கள்.

மனிதா! போராடும் குணம் இயற்கையாகவே நம் உதிரத்தில் ஊறியது. எப்படி எனில், கருவறையில் இடம் பிடித்தது, நம் போராட்டத்தில், இந்த அழகிய உலகை கண்டது, நம் தாயின் போரட்டத்தில். துணிந்து போராடு! வெற்றி உனதே!

சிறிய முயற்சிகளே பெரிய மாற்றங்களின் தொடக்கம்.

நம் இலக்கை நோக்கிய பயணத்தில், தடைகள் பல பிறக்கும். தடைகள் பல பிறந்தால், அதை உடைக்கும் வழிகள் பல உதிக்கும். புது திறமைகள் பல முளைக்கும். இலக்கை நோக்கி தொடர்ந்து செல். வெற்றி உன்னை தொடுவது உறுதி. நீ வெற்றி முத்தமிடுவது உறுதி.

போராடி உயரும் வித்தையை உன் மனதுக்கு கற்பித்து பார். அது தரும் உத்வேகம், உன்னை கொண்டு செல்லும் வாழ்க்கையின் வெகு உயரம்.

தன்னம்பிக்கை கவிதை


உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்பவன் சாதாரண மனிதன். ஆனால், தனக்கு ஏற்றாற் போல் உலகையே மாற்றி கொள்பவன் சாதனை மனிதன்!

வழிகள் அனைத்தும் அடைத்து, வழியே இல்லை என்னும் நிலையில், முழு இருள் உன்னை சூழ்ந்தாலும், இனி அவ்வளவு தான் என்று சுற்றமும் முற்றமும் கைவிட்டு கைகழுவி கடந்து சென்றாலும், அந்த இருளையும் வாய்ப்பாக பயன்படுத்தி உறுதியுடன் போராடி உயர்ந்து நில், தலை நிமிர்ந்து நில். எதிர்த்து நின்ற எதிரியும் எழுந்து நின்று கை கொடுப்பான். உன்னை கடந்து சென்ற கயவனும் கை தட்டி ஆர்ப்பரிப்பான். எட்டுத்திக்கும் உன் பெயர் ஒலிக்கும்.

நண்பா நீ உன் கனவை நோக்கி செல்லும் போது, உன் கனவுக்கு உந்துதல் தரும் ஒரு வார்த்தை கிடைத்தாலும், அதை பெற்றுக் கொள். உன் கனவுகளை சிதைக்கும் ஆயிரம் வார்த்தைகள் வந்தாலும் அதை விட்டுத் தள்.

வாழ்க்கையில் தடைகள் வந்தால் தோல்வி உறுதி அல்ல, தடைகளை கண்டு பின் வாங்கினால் தோல்வி உறுதி!

பிறரை நம்புங்கள் உயர்வதற்கு, வாய்ப்புகளை நம்புங்கள் முயல்வதற்கு, சவால்களை நம்புங்கள் வளர்வதற்கு, உங்களை நம்புங்கள் வாழ்வதற்கு.

Tamil motivation


தோல்வி ஓட ஓட துரத்தினாலும், நீ ஓட்டத்தை நிறுத்தி விடாதே. இடையே வரும் தோல்வியும் தடையும், வெற்றியின் ஆரம்ப படிநிலைகள்!

பிறர் உருவாக்கிய பாதையில் வரும் வெற்றியை ருசிப்பதை விட, நான் உருவாக்கிய பாதையில் வரும் தோல்வியை ரசிப்பதையே விரும்புகிறேன்.

பணத்தால் சாதிக்க முடியாததை கூட, முயற்சியால் சாதித்து காட்ட முடியும்.

தொடர் தோல்விகளை கண்டு துவண்டு விடாதே. தோல்வி என்பது சிறந்த அனுபவம். தோல்வி தொடர்ந்தால் முயற்சியும் தொடரட்டும், தோல்வி தோற்றுப்போகும் வரை.

சாதிக்க வேண்டும் என்றால் அடுத்தவர் மீது நம்பிக்கை வைக்காதே அது உன்னை அழ வைக்கும். உன் மீது நம்பிக்கை வை அது உன்னை வாழ வைக்கும்.

நம்பிக்கை கவிதை


பறவைகள் நம்புவது தன்னை தாங்கும் கிளைகளை அல்ல, தன் சிறகை தான். அதனால் தான் அது கிளை உடைந்தாலும் தன்னை தானே தற்க்காத்து கொள்கிறது. அது போல் உன் முயற்சிகள் உன்னை நம்பி இருந்தால், எந்த தோல்வியும் உன்னை எதுவும் செய்யாது.

வெற்றி தொடக்கமும் அல்ல, தோல்வி முடிவும் அல்ல. முயற்சி ஒன்றே அதை முடிவு செய்யும்!

இலக்கு என்பது மலைத்து நிற்பதற்கு அல்ல. முயன்று பெறுவதற்கு.

சுற்றங்கள் குற்றங்கள் காண்பதற்கே! முடங்கி விடாதே! நீ முற்றம் தாண்டினால் தான் உன் வெற்றி நிச்சயம் ஆகும்!

வாழ்க்கையில் தேவையற்றதை எண்ணி கண் கலங்காதே! தேவையானதை எண்ணி கனவு காண். உன் வாழ்க்கையை மாற்ற உன்னால் முடியும்.

மோட்டிவேஷன்


முயலாதவனுக்கு தன் முதுகெலும்பு கூட வளைந்து கொடுக்காது. முயல்பவனுக்கு பாராங்கல் கூட வளைந்து கொடுக்கும்.

வலி துன்பம் எல்லாம் வந்து போகும். சோதனை வேதனை எல்லாம் வெந்து தணியும். லட்சியத்தை நோக்கி உறுதியுடன் நடைபோடு. நாளைய உலகம் உனக்கு சொந்தம்.

உன் செயல் உனக்கு நம்பிக்கை கொடுத்தால், பலனை எதிர்பார்க்காமல், உலகத்தின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் உழைத்துக் கொண்டே இரு நண்பா. ஒரு நாள் இலக்கை அடைந்து கை மேல் பலனை அனுபவிப்பாய்.
இந்த உலகம் போராடி முன்னேற துடிப்பவன் முயற்சியை, முடக்க பல வழிகளில் முயற்சி செய்யும். ஆனால் இறுதியில் வெற்றி பெறுவது என்னமோ, போராடி முன்னேற துடிப்பவனின் முயற்சி தான்.

பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்வே எங்கள் அடுத்த பதிவின் ஊக்கம். துணிவே துணை. 🙏நன்றிகள்🙏

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad