Inspiration Life Quote Tamil | Positive Life Quote Tamil | பாசிட்டிவ் வாழ்க்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil | Tamil Motivation Quotes For Life
வணக்கம் நண்பர்களே!
"சிந்தனைக்கு எழுத்துரு கொடுப்பது சாதாரணம். அது உங்களுக்கு பிடித்து, உங்களை கருத்து பெட்டியில் கருத்துரு கொடுக்க தூண்டுவது அசாதாரணம்". உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவியுங்கள் நண்பர்களே. உங்கள் கருத்துக்கள் என் சிந்தனையை மாற்றி அமைக்கும். புதிய சிந்தனைகள் பிறக்க வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் ரசிக்கும் வண்ணம் இருந்ததா என்பதை அறிய உதவும். அனைத்தும் முற்றிலும் புதிய நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை வரிகள் என்பதற்கு லைக்மைஸ்டேட்டஸ் உத்தரவாதம் தருகிறது. தொடருகிறேன், தொடருங்கள். பிடித்திருந்தால் கருத்தை மறக்காமல் தெரிவியுங்கள்.
பாயும் புலியாய் இரு நண்பா! இலக்கு இமையமாக இருந்தாலும், விடாமல் முயற்சி செய்து, பதுங்கி பாய்ந்து துரத்தி பிடி! இலக்கும் உனதே! வெற்றியும் உனதே!
1 of 35
உன்னால் முடியும் என்று நீ எண்ணுவதை துணிந்து செய். துணிவில் பிறப்பதே வெற்றி.
2 of 35
போராடு நண்பா, போராடு! உன்னால் முடியும், போராடு! தோல்வி வந்தாலும், போராடு! தோல்விகள் வந்தாலும், போராடு! தோல்விகள் எல்லாம் வெற்றிகள் ஆகும் போராடு!
3 of 35
தோல்வி கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்! தோல்வி முயற்சியை மாற்றும்! முயற்சி முடிவை மாற்றும்! வெற்றி நமதாகும்!
4 of 35
தோல்வி என்பது அவமானம் அல்ல, அது நம்மை அவதாரம் எடுக்க செய்து, நம் அடையாளத்தை உலகுக்கு காட்டும் வெகுமானம்.
5 of 35
ஒவ்வொரு தோல்வியும் நாம் அடையப்போகும் ஆகப்பெரிய வெற்றியின் ஒவ்வொரு படிநிலைகள்.
6 of 35
வலிகள் எல்லாம் உன்னை கொல்வதற்கு அல்ல, நீ போராடி வெல்வதற்கு!
7 of 35
வலிகளை தாங்க நினைத்தால் தாக்கிக் கொண்டே இருக்கும்! வலிகளை தாண்ட நினைத்தால் வாழ்வில் வழிகள் பிறக்கும்!
8 of 35
சோதனை என்பது வேதனைக்கு அல்ல, சாதனைக்கான ஒரு வழி.
9 of 35
வாழ்க்கையில் வரும் அவமானங்கள் எல்லாம் வலிகள் அல்ல, நம் லட்சியத்தை நோக்கிய பயணத்தின் வழியில் நம்மை செதுக்கி உயர்த்தும் உளிகள் அவைகள்.
10 of 35
ஒவ்வொரு வெற்றியும் பல தோல்விகளால் கட்டி எழுப்பப்படும் கோபுரம்!
11 of 35
சில லட்சியங்களை அடைந்தே தீர வேண்டும் என்றால், பல அலட்சியங்களை கடந்தே தீர வேண்டும்...!
12 of 35
நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், பல புறக்கணிப்புகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்!
13 of 35
தன் மேல் அதீத நம்பிக்கை என்பது பிறர் நம்பிக்கை வார்த்தையிலோ இல்லை வாக்கிலோ பிறப்பது அல்ல, நம்பி ஏமாந்து அடிபட்டு மிதிபட்ட பின் தன் மேல் தனக்கே பிறப்பது.
14 of 35
முடியாதவன் முடிந்ததை பற்றி புலம்பி கொண்டிருப்பான்! முடியும் என்பவன் முடியாததை முடிக்க முயன்று கொண்டிருப்பான்!
15 of 35
முடியாததை முடியும் என்ற வைராக்கியத்துடன் எடுத்து சாதித்து காட்டும் சாதாரண மனிதன்: சாதனை மனிதன்!
16 of 35
என்னால் முடியும் என்று தன்னை நம்பி முதல் அடி எடுத்து வைப்பவன், முடியாததை முடித்து காட்டுவான், லட்சியத்தை அடைந்து வென்று காட்டுவான்.
17 of 35
எண்ணமும் செயலும் ஒருமித்து செயல்படுபவன் செயலை தடுக்க மலையை பெயர்த்து இடையே வைத்தாலும், மலை உடைபடுமே தவிர, அவன் செயல் எக்காரணம் கொண்டும் தடைபடாது.
18 of 35
உன் வாழ்க்கை முடிந்தது என்று உலகம் முற்றுப்புள்ளி வைக்கும் இடத்தில், மேலும் இரண்டு புள்ளிகள் இட்டு உன் வாழ்க்கையை தொடங்கு. உன் வாழ்க்கையை முடிவு செய்ய வேண்டியது நீயே அன்றி பிறர் அல்ல.
19 of 35
எல்லாம் முடிந்து போனது என்று எண்ணும் போது, முடியவில்லை என்று சொல்லி, புது நம்பிக்கையும் உத்வேகமும் தருவதே, பிறர் தரும் வலியும், வேதனையும் தான்.
20 of 35
இங்கு வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான். இலக்கும், இலக்கை நோக்கிய திட்டமும், திட்டத்தை நோக்கிய உழைப்பும் தான் முதல் பட்சம். தோல்வி என்பது வெற்றி மகுடத்தை அலங்கரிக்கும் வைரங்கள்.
21 of 35
உன் திட்டமும், செயலும் சரியாக இருந்தால், உன் முயற்சி யார் தடுத்தாலும் வெல்வது உறுதி நண்பா.
22 of 35
வாழ தடை என்றும் எதுவும் இல்லை, முடிவு என்றும் எதுவும் இல்லை. முடியும் வரை முயற்சி செய், முடியாது போனால் பயிற்சி செய். இடையில் தடை என்று எது வந்தாலும், எவர் வந்தாலும், உடைத்து முன் செல்.
23 of 35
துரோகங்கள் எல்லாம் வலிகள் அல்ல, நம் இலக்கை நோக்கிய பயணத்தின் வழியில், நம்மை செதுக்கும் உளிகள் அவைகள்.
24 of 35
"நான் வென்று காட்டுவேன்" என்ற நம்பிக்கை உள்ள மனது, எத்தனை முறை தோற்றாலும் *வெல்லாமல் அடங்காது.*
25 of 35
அவமதித்தவனையும் அன்பாக்கும் வெற்றி என்பது கடவுளிடம் கையேந்தி நிற்பதால் கிடைப்பதல்ல. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கையில் இருப்பதால் கிடைப்பது.
26 of 35
சாத்தியப்படாது என்று உலகம் சொல்வதையும் சாத்தியப்படுத்தி காட்டும் விடாமுயற்சி உள்ள உறுதியான மனம்.
27 of 35
முடியும் என்று நம்பு! உன்னால் முடியும் என்று நம்பு! உன்னை நீ நம்பினால், உன் மனம் அதிகம் செயல்படும்! வழிகள் புலப்படும்! வெற்றி உனதாகும்!
28 of 35
முயற்சியின் முன்னால்: தோல்வி துரோகம், கேலி கிண்டல், சோதனை வேதனை, எதுவாக இருந்தாலும் மாய்ந்து மடியும். முயற்சி வெல்லும்.
29 of 35
உன்னை நம்பு! உன் முயற்சியை நம்பு! உதவிடுவர் என்று அடுத்தவரை நம்பிடாதே! வெம்பிடாதே! உன் கையே உனக்குதவி மறந்திடாதே!
30 of 35
நீ உன் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், யார் எதை சொன்னாலும் கேட்டுக் கொள். உனக்கு உகந்ததை மட்டும் ஏற்றுக் கொள்.
31 of 35
சோகம் என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல. பிடித்துக்கொள்வதும் பிடுங்கி போடுவதும் அவரவர் மன துணிவில் இருக்கிறது.
32 of 35
எதிரியின் பலம் பொருட்டல்ல! நம் திட்டமும், தைரியமும், திட்டத்தை நோக்கிய முயற்சியும், நம்பிக்கையும் தான் முக்கியம்!
33 of 35
வீழ்வதும், வீழ்த்தப்படுவதும் சாதாரணம்! அந்த நிலையில் இருந்து மீழ்வதும், மீண்டும் வெல்வதும் அசாதாரணம்!
34 of 35
முன் செல்ல, அடங்காமல் முயற்சித்து கொண்டு இரு நண்பா! தோல்வி கூட ஒரு நாள் அடங்கி, நடுங்கி, வழிவிட்டு பின் செல்லும்!
35 of 35
நன்றிகள்!
Thanks For Your Comment...