Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 83 கூடா நட்பு ஸ்டேட்டஸ்

*குறள் 821:* சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. *மு.வ விளக்க உரை:* அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

Thirukkural 821



*குறள் 822:* இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

Thirukkural 822



*குறள் 823:* பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. *கலைஞர் விளக்க உரை:* அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.

Thirukkural 823



*குறள் 824:* முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

Thirukkural 824



*குறள் 825:* மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று. *கலைஞர் விளக்க உரை:* மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.

Thirukkural 825



*குறள் 826:* நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். *கலைஞர் விளக்க உரை:* பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

Thirukkural 826



*குறள் 827:* சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

Thirukkural 827



*குறள் 828:* தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

Thirukkural 828



*குறள் 829:* மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. *மு.வ விளக்க உரை:* புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

திருக்குறள் 829



*குறள் 830:* பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல். *கலைஞர் விளக்க உரை:* பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

Thirukkural 830


ENGLISH QUOTES AND WISHES IMAGES

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad