Type Here to Get Search Results !

30 வாழ்க்கை மேற்கோள்கள் | ஸ்டேட்டஸ் இமேஜ் | Tamil Life Quotes Image

நீங்கள் நினைப்பதை எழுத
நான் காகிதம் அல்ல.
நான் நினைப்பதை எழுதும்
பேனா நான்.
1 of 30
Life quote tamil

திறந்த மனம் தான்...!
ஆனால், அதில் திறந்து காட்டாத,
திறந்து காட்ட முடியாத,
பக்கங்கள் பல இருக்கின்றன...!
2 of 30
Life quote in tamil

ஏற்றுக்கொள்ள முடியாத
மாற்றங்களுக்கு
பெயர் தான் ஏமாற்றம்..!!
3 of 30
ஏமாற்றம் ஸ்டேட்டஸ் இமேஜ்

எதுவும் வேண்டாம் என்பது இயல்பு.
எதுவுமே வேண்டாம் என்பது விரக்தி.
எனக்கு எதுவுமே வேண்டாம்.
4 of 30
விரக்தி ஸ்டேட்டஸ் இமேஜ்

என் வலிகளை உணர வேண்டாம்.
வலிக்கும் என்று உணர்ந்தால் போதும்.
5 of 30
வலி ஸ்டேட்டஸ் இமேஜ்

பிச்சை போடவும் முடியாத,
பிச்சை எடுக்கவும் இயலாத,
ஒரு தர்மசங்கடமான வாழ்க்கை
நடுத்தர மக்களின் வாழ்க்கை...!
6 of 30
Valkkai status image

நூலிழையில் வாய்ப்பை
தவற விட்டவர்களை விட,
நூல் இல்லை என்று வாய்ப்பை
தவற விட்டவர்கள் தான் ஏராளம்...!
7 of 30
வாய்ப்பு ஸ்டேட்டஸ் இமேஜ்

மனமே பதற்றம் கொள்ளாதே..!
மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்.
"தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்".
8 of 30
Tamil inspiration life quote

என் கஷ்டத்தை தீர்க்க யாரும் வேண்டாம்.
என்ன தான் கஷ்டம் என்று கேட்க
யாராவது ஒரு நபர் இருந்தால் போதும்.
நானும் கவலையை மறைத்து வாழ்ந்து விடுவேன்.
9 of 30
கவலை கவிதை

வாழ்க்கையில் நாம் நேர்மையாக வாழ்வது,
சிரமமாக இருந்தாலும்.
நாம் வாழ்ந்த சென்ற பின்,
அது பலர் ரசிக்கும் காவியமாக இருக்கலாம்..!
10 of 30
நேர்மை ஸ்டேட்டஸ் இமேஜ்

தர்மத்தின் பக்கம்
நிற்பவனை மதி...!
அதர்மத்தின் பக்கம்
நிற்பவனை மிதி...!
11 of 30
Tamil dp image

கண்ணில் விழுந்த தூசியாய்,
சிலர் செய்துவிட்டுப் போன செயல்கள்.
மனதில் இன்றும் உறுத்திக்
கொண்டு தான் இருக்கிறது...!
12 of 30
Tamil dp for girls

நினைப்பது நல்லதாக இருந்தால் தான்,
நடப்பது நல்லதாக இருக்கும்..!
விதைப்பது நல்லதாக இருந்தால் தான்,
முளைப்பது நல்லதாக இருக்கும்..!
13 of 30
தமிழ் ஸ்டேட்டஸ் இமேஜ்

மற்றவர்களுக்கு நல்லதே செய்யுங்கள்,
அது எதிர்பாராத வழியில்
எதிர்பாராத நேரத்தில் திரும்பி வரும்.
தீமை செய்தாலும் இதுவே தான்.
14 of 30
கர்மா கவிதை

புன்னகை என்னும் முகமூடி அணிந்து
வலம் வரும் மனிதனின்
மனதினில் சென்று பார். புன்னகையின்
இன்னோர் முகம் காண்பாய்.
15 of 30
Mugamoodi kavithai

குனிந்தால் குத்துகிறது,
நிமிர்ந்தால் தட்டுதுகிறது,
வாழ்க்கை...!
16 of 30
வாழ்க்கை ஸ்டேட்டஸ் இமேஜ்

யாருக்கும் உன் கண்ணீர் தெரியாது!
யாருக்கும் உன் வலிகள் புரியாது!
ஆனால், உன் தவறுகள் மட்டும்
பத்து மடங்காக தெரியும்..!
17 of 30
மனிதர்கள் ஸ்டேட்டஸ் இமேஜ்

ஒதுக்க படுகிறாய் என்று தெரிந்தவுடன்
ஒதுங்கி விடு காரணம் கேட்காதே.
காயப் படுத்துவதற்காகவே உருவாக்கி
வைத்திருப்பார்கள் பல காரணங்களை.
18 of 30
Tamil quote

தேனாக பேசி பழகுபவர்கள் எல்லாம் நமக்கு
நன்மையே செய்வார்கள் என்று நினைக்காதே.
தேளின் கொடுக்கில் மட்டும் அல்ல
தேனை சேகரிக்கும் தேனியின்
கொடுக்கிலும் விசம் உண்டு.
19 of 30
Tamil status image

காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.
காயப்படுத்தி விட்டு
அதை நியாயப்படுத்தும் போது
தான் வலிக்கிறது.
20 of 30
Vali kavithai

எதிர்மறை எண்ணம் உங்களுக்கு ஒருபோதும்
நேர்மறையான வாழ்க்கையை
தருவது இல்லை.
எண்ணம் போல் வாழ்க்கை...!
21 of 30
Negative thought tamil quote

அடுத்தவனுக்கு ஒரு பிரச்சனை என்றால்,
ஆயிரம் ஆலோசனை சொல்பவன்.
தனக்கு ஒரு பிரச்சனை என்றால்,
அடுத்தவனை தேடி ஓடுகிறான்.
22 of 30
Prachanai quote image

பணம் இருந்தால் நான் சொல்வதை நம்பும் உலகம்,
பணம் இல்லை என்றால்,
என்னை பற்றி அடுத்தவன் சொல்வதை நம்புகிறது.
வாழ்கையில் பணம் தான் எல்லாம் போலும்.!
23 of 30
Panam status image

பணத்தின் மதிப்பு தெரியனும் என்றால்..?
செலவு செய்யுங்கள்..!
உங்கள் மதிப்பு தெரியனும் என்றால்..?
கடன் கேளுங்க..!
24 of 30
Money tamil quote

அறிவு எந்த துறையிலும் முன்னேற்றி
உட்கார வைத்து விடும்.
ஆனால், அங்கே பணிவு தான்
ஏற்றியும் விடும், இறக்கியும் விடும்.
25 of 30
Arivu panivu quote

மூன்று வேளை உணவுக்காக நடத்தும்
வாழ்க்கை போராட்டத்தில்.
அடுப்பு எரிய வழி இல்லை என்றாலும்
வயிறு எரிகிறது...!
26 of 30
போராட்டம் கவிதை

உங்களை தெரியாத சிலர் தவறாக
நினைக்கலாம், பேசலாம்.
விட்டு தள்ளுங்கள். ஒருவரை
அறியாதவரை நாய் கூட
குறைத்து கொண்டு தான் இருக்கும்.
27 of 30
Man tamil quote

சிரித்து விட்டு கடந்து விட்டால் அவர்கள்
மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றும்.
ஐந்து நிமிடம் மனம் விட்டு பேசி பாருங்கள்.
பின் தெரியும் அவன்அவன் படும் வேதனை.
28 of 30
Tamil life quote

இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது.
இனி வாழப்போகும் வாழ்வை அறியவும் முடியாது.
கற்றுக் கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.
29 of 30
Valkkai status image

மீனாக பிறந்து இறப்பது என்பது உறுதி ஆகி விட்டால்.
பொழுது போக்கிற்கு மீன் பிடிப்பவன்
தூண்டிலில் சிக்கி விடாதே.
பிழைப்பிற்காக மீன் பிடிப்பவன் வலையில் சிக்கி கொள்.
உன் மரணம் கூட ஒருவனை வாழ வைக்கட்டும்.
30 of 30
Useful life quote tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad