Type Here to Get Search Results !

25 வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Life Quotes With Image

பிறப்பதும் இறப்பதும் இல்லை வாழ்க்கை.
பிறப்பு முதல் நீ செய்தவைகாளால்
உன் இறப்பிற்கு பின்னும் நீ
பிறர் இதயங்களில் வாழ்வதே வாழ்க்கை!
1 of 25
Tamil quote about life

அனைவரும் நண்பர்கள் தான்,
அனைவரும் உறவுகள் தான்,
வசதி வாய்ப்பு இருக்கும் வரை.
வசதி வாய்ப்பை இழந்த பின் தெரியும்.
உண்மை நண்பன் உண்மை உறவு யார் என்று!
2 of 25

தெளிவாக இருங்கள் இல்லையென்றால்
மனக்கவலை நமக்குத் தான்.
தேவை முடிந்ததும் விட்டு செல்லும்
உறவுகளே இங்கு ஏறாளம்...!
3 of 25
Life quote tamil

நீ யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை.
உனக்கு பிடிக்கவில்லை என்றால்
அமைதியாக விலகிவிடு.
ஏனெனில், உன் வெறுப்புக்கு பலியாவது
உனது நிம்மதியே...!
4 of 25
Tamil life quote

ஊர் வாயை மூட இரு கைகள் போதாது..!
நம் காதை மூட இரு கைகள் போதும்..!
எது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
5 of 25
Tamil quote for life

ஆண்டவன் தூங்கும் போது பிறந்து விட்டேன் போலும்.
கேட்பது எதையும் தருவதும் இல்லை.
தந்தது எதுவும் நிலைப்பதும் இல்லை.
ஆண்டவா நானும் ஒருத்தன் இருக்கிறேன்.
மறந்து விடாதே... நான் உன்னை மறக்கவில்லை...
6 of 25
Prayer tamil quote

கடவுள் சிறந்தவர்...!
மனிதர்களைப் போல் கஷ்ட காலத்தில்
அறிவுரை சொல்லி சாகடிக்காமல்,
தூரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பதால்.
7 of 25
God tamil quote

பிறப்பும் இறப்பும் நிச்சயமே.
நடுவே என்ன செய்தோம் என்பது முக்கியமே.
இறப்பினில் உறவுகள் அழுவது அவசியமே.
ஆனால், ஊரே அழுவது அதிசயமே...!
அதிசயம் படைப்போம் நண்பா...!
8 of 25
Pirappu irappu kavithai

நாம் வாழ்ந்த இடம் வெற்றிடமாக
இருக்குமாறு வாழ்ந்து விட்டு
செல்ல வேண்டும்.
அதுவே நாம் வாழ்ந்த அடையாளம்.
9 of 25
Adaiyalam quote

பாசம் வச்சாலே பிரச்சனை தான்.
ஒன்னு தனியா விட்டு போவாங்க,
இல்ல தவிக்க விட்டு போவாங்க.
10 of 25
Paasam quote

அடிச்சா தான் வலிக்கும் என்று இல்ல.
நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட
நடிச்சா கூட,
வலிக்க தான் செய்கிறது...!
11 of 25
Vali quote

என் மனதை நானே தேற்றிக் கொண்டு
மனிதனாக நடமாடுகிறேன்.
என்னை மேலும் காயப்படுத்த வேண்டாம்.
காயப்படுத்தினால் எதிர் விளைவை
எதிர் கொள்ள தயாராக இருங்கள்...!
12 of 25
Tamil do image

தேடிச் சென்று பேசுவதில் தவறில்லை.
தேடி வராதவரிடம்
தேடிச் சென்று பேசுவது தான் தவறு.
13 of 25
Life quote tamil

இப்போது கிடைக்கும் அன்புக்காக.
எப்போதும் கிடைக்கும் அன்பை
இழந்து விடாதே. பிறகு,
எந்த அன்பும் இல்லாமல்
தனிமையில் வாடுவாய்.
14 of 25
Tamil advice quote

ஒருவரால் உனக்கு சந்தோசம் வரும் என்றால்,
கண்டிப்பாக ஒரு நாள் கண்ணீரும் வரும்.
15 of 25
Manner quote

கஷ்டப்பட்டு ஒரு பிரச்சனையை
கப்பல் அனுப்பி விட்டால்,
அடுத்த பிரச்சனை
ராக்கெட்டில் வந்து விடுகிறது..!
16 of 25
Problem tamil quote

நொந்து போய் இருக்கும் போது
நாலு பேர் வந்து ஆறுதல் சொல்வதைவிட,
கத்தையா கையில் கொஞ்சம் காசு
கொடுத்தா தைரியமாக இருக்கும்.
பணம் கொடுக்கும் தைரியம் வேறு
எதுவும் கொடுப்பது இல்லை...!
17 of 25
Panam quote

வாழ்க்கை எப்போதும் அழகாய்
அமைவதில்லை.
நாம்தான் அதை அழகாய்
மாற்றிக்கொள்ள வேண்டும்.
18 of 25
Valkkai quote

மகிழ்ச்சியே நேரமிருந்தால் வந்துபோயேன்...!
இங்கு என்னை கவனிப்பார் யாருமில்லாமல்...!
கவலைகள் மட்டுமே நொடிக்கொருதரம் வந்துபோகிறது...!
வருவாயா மகிழ்ச்சியே...!
உனக்காக என் வாசல் கதவு திறந்தே இருக்கிறது தினம்...!
அன்போடு அழைக்கிறேன் ஆறுதல் தர வாயேன்...!
வந்து, என் கவலைகளை களவாடிச் சென்று விடு மகிழ்ச்சியே...!
19 of 25
Magilchi quote

நீ அழவே கூடாது.
நான் உன்னை அழவிட மாட்டேன்.
என்று சொல்லும் உறவுகள் தான்
ஒர் நாள் நீ அழுதா ஆழு செத்தா சாவுனு
நம்மல தனியா தவிக்க விட்டுட்டு போறாங்க.
20 of 25
Unmai varigal

நீ செய்த தானமும் தர்மமும்...!
நீ கொடுத்த மரியாதையும்...!
நீ செய்த துரோகமும்...!
கண்டிப்பாக உன்னை சேராது
உன் உயிர் போகாது...!
21 of 25
Karma tamil quote

பார்வை இல்லாதவர்க்கு கண் கொடுத்து
உதவ வேண்டும் என்று இல்லை.
கை கொடுத்தும் உதவிடலாம்.
22 of 25
Help blind quote

யாரையும் உடலாலும் மனதாலும்
காயப்படுத்த வேண்டாம்.
இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம்,
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்
காலம் உங்களைக் காட்டிலும் பலம் மிக்கது.
23 of 25
Neeram quote

ஒரு நிமிடம் கவலைக்கு இடம் கொடுத்தால்!
நீ ஒவ்வொரு நிமிடமும்
உன் மகிழ்ச்சியை இழப்பாய்!
உன் வாழ்வில் எதை இழந்தாலும்
துணிச்சலோடு போராடு வெற்றி நிச்சயம்.
24 of 25
Inspiration life quote tamil

சலித்து வாழ்வது அல்ல வாழ்க்கை.
சாதித்து வாழ்வது தான் வாழ்க்கை.
மலைத்து வாழ்வது அல்ல வாழ்க்கை.
பிறர் மலைக்க வாழ்வது தான் வாழ்க்கை.
25 of 25
Valkkai kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad