Type Here to Get Search Results !

11 நினைவுகள் கவிதை | Ninaivugal Tamil Kavithai Images


உறவுகள் தொலைந்து போகலாம்
ஆனால், நினைவுகள் எந்நாளும்
தொலைந்து போவது இல்லை..!
1 of 11
Ninaivugal kavithai

என் நிழல் கூட என்னை
தனியே விட்டு விடுகிறது.
உன் நினைவு ஒரு நொடி கூட
என்னை தனியே விட்டது இல்லை.
2 of 11
Ninaivugal kavithai image

நினைவுகள் அனாதையாக
விட்டு செல்வது இல்லை.
நிஜங்களைப் போல்.
3 of 11
Ninaivugal kavithai image

தனிமையில் நான் எழுதும்
கவிதையில்,
நீ வந்து விடுகிறாய்.
ஆறுதல் சொல்லும் நினைவுகளாய்...!
4 of 11
Kavithai ninaivu

இருப்பது ஒரு இதயம் தான்
அதிலும் உன் நினைவுகள் தான்.
இருப்பது இரு விழிகள் தான்
அதிலும் உன் உருவம் தான்.
5 of 11
Ninaivugal kavithai image

பேசாமல் இருந்தாலும் அதிகம்
பேசுகிறது நினைவுகள்!
அதிலிருந்து வெளிவரவே
எத்தனை முயற்சிகள் போராட்டங்கள்!
அத்தனையும் வென்று விடுகிறது நினைவுகள்!
6 of 11
Tamil ninaivugal kavithai

காரணமில்லாமல் தொற்றிக்கொள்ளும்
கவலைகளை கலைத்து,
மகிழ்ச்சியாக தொடர
உதவுகிறது உன் நினைவுகள்.
7 of 11
Ninaivugal kavithai image

காலை மலரும் மலர்கள் மாலை வாடிவிடும்.
என் மனதில் மலர்ந்த உன் நினைவுகள்.
வாடுவதும் இல்லை மறைவதும் இல்லை.
என் மனம் முழுதும் உன் வாசம் மட்டுமே.
8 of 11
Ninaivugal kavithai

தினம் என் உறக்கத்தை கேட்டு
வாங்கிக் கொள்கிறது
உன் நினைவுகள்.
9 of 11
Ninaivugal kavithai

என் இதயத்துக்கு
வெளிச்சம் தருவதே
உன் நினைவுகள் தானே!
அதையும் மறக்க சொல்கிறாய்.
அதை மறந்து நான் எங்கு செல்வதோ.
10 of 11
Tamil kavithai ninaivugal

உன் நினைவுகளை அனு தினம் சுமந்து,
உறங்கா விழிகளை வருத்தி,
இதயத்தை கசக்கி கிழித்து
நான் பெற்ற குழந்தை என் கவிதை.
11 of 11
Ninaivugal dp image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area