18 நினைவுகள் காதல் கவிதை | Ninaivugal Kavithai Images
Sunday, December 20, 2020
நினைவுகள் காதல் கவிதைகள் | Love Quotes In Tamil
தினம் தினம் வெட்டி எரிந்தும் வளர்ந்து
கொண்டிருக்கும் நகங்களை போல்,
பல முறை தூக்கி எறிந்தும் என் இதயத்தில்
கொட்டிக் கிடக்கிறது உன் நினைவுகள்.
1 of 18
உன் அணைப்புக்குள் நீ என்னை
சிறை வைக்க வில்லை என்றாலும்.
நான் சிறை பட்டு தான் கிடக்கிறேன்.
முப்பொழுதும் உன் நினைப்புக்குள்.
2 of 18
கண் இருந்தும் குருடனாக வாழ ஆசை.
நினைவு இருந்தும் நினைவிழக்க ஆசை.
கண் திறந்தால் பிம்பமாக அலைகிறாய்.
கண் மூடினால் நினைவுகளாக அவிழ்கிறாய்.
நிஜமாகி விடு என் உயிரே நிஜமாகி விடு என் கனவே.
3 of 18
நிறம் மாறாது வானம்.
வாசம் மாறாது பூ.
தினம் மாறாது உதயம்.
கணம் மாறாத உன்
நினைவுகளுடன் நான்.
4 of 18
எதை எதையோ செய்து
மனதை மாற்ற முயற்சித்தாலும்.
அது ஒரு போதும் மாறாமல்
நிலைத்து நிற்கிறது உன் நினைவில்.
5 of 18
என் உறக்கத்தின் ஒவ்வொரு
இரவும்
உன் நினைவுகளுக்கு
பலியாகிறது.
6 of 18
பிம்பம் முழுவதும் நீயாகிறாய்.
ஆதலால் இமைகள் மூடிட மறுக்கின்றது.
காணும் கனவுகள் கலைந்தாலும்.
உன் நினைவுகள் கலைந்திட கூடாது என்பதற்காக.
7 of 18
தனிமை நினைவுகள் கவிதைகள் | Tamil Loneliness
தனிமையில் விட்டு விட்டு சென்று விட்டாய்.
உன் நினைவுகளை எனக்குள் தந்து விட்டு.
நீ என்னோடு நிஜத்தில் வாழ்ந்தது சில நாள் தான்.
நான் உன் நினைவோடு வாழ்கிறேன் பல நாள்.
என் இதயம் துடிக்கும் வரை
என்னில் நீங்காது உன் நினைவுகள்.!
8 of 18
உறக்கத்தை தர இரவு காத்திருந்தும்,
உறங்காது உன் நினைவுகளுடன்
நானும் விழித்திருக்கிறேன்.
தனிமையில் வாழும் நிலவைப் போல்.
9 of 18
இணையாத நம் வாழ்வில்,
துனையானது உன் நினைவுகள்.
அழியாத என் காதலுடன்
தனிமையில் நான்.
10 of 18
நினைவுகள் சோகக் கவிதைகள் | Sad Quotes In Tamil
சில உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்.
கொடுத்து விட்டு செல்கின்றன.
நினைத்து நினைத்து அழ
வலி தரும் ஆழமான நினைவுகளை.
11 of 18
கொட்டி தீர்த்த மழைக்கு பின்,
இலையில் ஒட்டி இருக்கும் ஈரம் போல்.
சொட்டு சொட்டாய் வடிகிறது
கண்களில் கண்ணீராய் உன் நினைவுகள்.
12 of 18
நாடோடியாக அலைந்து திரிகிறேன்.
உன் நினைவுகளை சுமந்து கொண்டு.
13 of 18
தினமும் நிலவோடும் போராட முடியவில்லை.
உன் நினைவோடும் போராட முடியவில்லை.
நிலவை பார்க்கும் போதெல்லாம்,
உன் முகத்தை காண்கிறேன்.
உன் நினைவோடு போராடும் போதெல்லாம்,
என் கண்ணில் கண்ணீரை காண்கிறேன்.
14 of 18
இதயத்தின் கவலைகளை மறக்க முடியாது.
நீ என்னை விட்டு சென்றாலும்,
மனதை விட்டு செல்லாது உன் நினைவு.
15 of 18
காலங்கள் கடந்த பின்பும்.
நம் காதல் காட்சிகளும் மாறவில்லை,
அதன் சாட்சிகளும் மாறவில்லை.
வலிகளோடு கடந்து செல்கிறேன்.
காதல் கொடுத்த நினைவுகளை
கவி என்ற பெயரில் கண்ணீரால்
இங்கு பதிய வைத்து விட்டு💔🌹💔.
16 of 18
இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ!
தவறாமல் வந்து விடுகிறது உன் நினைவுகள்!
17 of 18
விலகவும் முடியாமல்,
நெருங்கவும் முடியாமல்,
தினம் தினம் வதம் செய்கிறது,
உன் நினைவுகள் என்னை💘💘💘.
18 of 18
0 Comments to "18 நினைவுகள் காதல் கவிதை | Ninaivugal Kavithai Images"
Post a Comment
Thanks For Your Comment...