Type Here to Get Search Results !

11 வாழ்க்கைக்கு உதவும் தரமான சிந்தனைகள் | Tamil Usefull Quotes For Life

பள்ளியில் சேரும் போது,
சாதி பெயரை கேட்டு விட்டு,
சாதி சான்றிதழை வாங்கி விட்டு,
சேர்ந்த பின் பாடம் நடத்துகின்றனர்.
"சாதிகள் இல்லையடி பாப்பா என்று".

ஜாதி ஒழிப்பு கவிதை

சூழ்நிலைகள் எந்த நேரத்திலும் மாறக்கூடும்.
இந்த வாழ்க்கையில் யாரையும்
மதிப்பிடவோ காயப்படுத்தவோ வேண்டாம்.
நீங்கள் இன்று சக்திவாய்ந்தவராக இருக்கலாம்.
ஆனால் காலம் உங்களைவிட சக்தி வாய்ந்தது.

Valkkai Kavithai

சந்தேகம் உன்னை நெருங்குகிறது
என்றால் புரிந்து கொள்.
சந்தோசம் உன்னை விட்டு வெகு
தூரம் செல்ல போகிறது என்று.

சந்தேகம் கவிதை

உன்னால் சிரித்தவர் ஆயிரம் பேர் இருக்கலாம்,
ஆனால் உன்னால் அழுதவர் ஒருவர்கூட இருக்கக்கூடாது.
உன்னால் வாழ்ந்தவர் பலர் இருக்கலாம்.
ஆனால் உன்னால் வீழ்ந்தவர் இருக்கக்கூடாது.
உன்னால் பசியாறியவர் இருக்கலாம்,
ஆனால் பிறர் பசிக்கு நீ காரணமாக இருக்கக்கூடாது.
உன்னால் ஏற்றம் பெற்றவரிருக்கலாம்,
ஆனால் உன்னால் ஏமாற்றம் பெற்றவர் இருக்கக்கூடாது.

Tamil advice quote

காதலிக்க பெண் தேவை.
மணம் கொள்ள பெண் தேவை.
வாரிசு மட்டும் ஆண் தேவை.
என்ன கொடுமையடா இது...!

மனிதன் கவிதை

கடந்த காலத்தை மாற்ற முடியாது.
ஆனால்,
கடந்த கால அனுபவம் கொண்டு,
நிகழ்காலத்தை சரியாக எதிர்கொண்டு
எதிர்காலத்தை மாற்ற முடியும்.

Tamil quote for life

பெரும்பாலான ஆலோசனைகள்
உங்களை வைத்து செய்யப்படும்
புதிய ஆய்வுகள் தான்.
ஆலோசனையை கேட்டுக் கொள்ளுங்கள்.
முடிவுகளை நீங்கள் எடுங்கள்.

Arivurai Kavithai


வீட்டையும் வீட்டு மக்களையும்
வளர்ப்பது அல்ல.
நாட்டையும் நாட்டு மக்களையும்
வளர்ப்பது தான் அரசியல்...!

அரசியல் கவிதை

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வியை
தேவை ஏற்படும் போது கேட்க வேண்டும்.
கேட்க தவறினால் வாழ்க்கை தவறிவிடும்.

Tamil quote for life

சட்டமாகவும், சத்தமாகவும்
பேசினால் மட்டும் போதாது!
சட்டம் - பொதுவானதாகவும்,
சத்தம் - உண்மை உள்ளதாகவும்
இருத்தல் அவசியம்...!

Political tamil quote

விழி திறந்து உறங்கியது போதும்.
நம்பி ஏமாந்தது போதும்.
இனியும் ஏமாறாமல் இருக்க,
விழி திறந்து விழித்தெழுந்து
வீர நடை போடு நண்பா.
உன் மாற்றம் உன் கையில்.

Tamil election quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad