21 சமூக சிந்தனைகள் | அரசியல் சிந்தனைகள்

Tamil Social Quotes | Tamil Political Quotes | Tamil Voters Quotes

கையூட்டு வாங்கிக் கொண்டு வேலை
செய்பவனுக்கு கொடுக்கும் மரியாதையை,
கையூட்டு வாங்காமல் அதே வேலையை
செய்பவனுக்கு கொடுப்பதில்லை உலகம்.
உலகத்தின் பார்வையில் அவன் ஏமாளி.
உண்மை: மனிதம் உள்ள மனிதன் அவன்.
1 of 21
லஞ்சம் கவிதை

ஊரடங்கு அறிவிப்பை கேட்டதும் ஓடிச்சென்று
வாங்கியது தங்கமும் வெள்ளியும் அல்ல.
உயிர் வாழ தேவையான உணவினை.
உணவின் தேவையை உணர்வோம்.
விதைப்பவன் பெருமையை அறிவோம்.
2 of 21
விவசாயி கவிதை

அவனவன் படைப்புக்கு அவனவன் விலை வைக்கிறான்.
காப்புரிமை வேறு வாங்கிக்
கொள்கிறான்.
விவசாயின் படைப்புக்கு மட்டும் விலைவைக்கும்
சுதந்திரமும் இல்லை, காப்புரிமையும் இல்லை.
3 of 21
Tamil social Quotes

பாதிக்கப் பட்டவரும் நீதி கேட்கிறார்.
பாதிப்பை கொடுத்தவரும் நீதி கேட்கிறார்.
நீதி கேட்பது யாராக இருந்தாலும்,
நீதி கொடுப்பது என்னமோ பணம் தான்.
4 of 21
Judgement tamil quote

அமைதியாக இருப்பவர்கள்
பேசும் உண்மையை விட,
சத்தமா பேசுபவர்கள் பேசும்
பொய்க்கு இந்த சமுதாயத்தில்
மதிப்பும் மரியாதையும் அதிகம்.
5 of 21
Tamil social Quote

"வந்தவனை எல்லாமல் வாழவைக்கும்
தமிழகம்" என்று சொல்லி சொல்லியே,
தமிழனை கைதட்ட வைத்து,
"ராஜா"வாகவும் "மந்திரி"யாகவும்
ஆண்டு அனுபவித்து விட்டனர்.
6 of 21
Tamil political quote

ஜனநாயக நாட்டில் நம் ஓட்டை
நாம் போடுவது, நம் உரிமை, நம் கடமை.
வெறுப்பிலும், கடுப்பிலும் நோட்டாவில் போட்டால்,
இந்த நாட்டின் பார்வையில் நீயும் நோட்டா தான்.
ஜனநாயகத்தை காப்பது நம் கடமை!
காப்போம் ஜனநாயகத்தை!
படைப்போம் புது பாரதத்தை!
7 of 21
Vote tamil quote

ஒரு ஓட்டில் என்ன மாற்றம்
வந்து விடப்போகிறது என்று
மெத்தனமாக இருந்து விடாதே.
உன்னைப்போல் பத்து பேர்
நினைத்து விட்டால் அதுவே
மோசமான மாற்றத்தின் தொடக்கம்.
8 of 21
Best tamil quote for voters


கருப்பு மை உங்கள் இடக்கை ஆள்காட்டி விரலில்
வரும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டியது,
நடந்ததையும், நடந்து கொண்டு இருப்பதையும்.
பின் உங்கள் வலக்கை ஆள்காட்டி விரல்
கண்டிப்பாக சரியாக செயல்படும்.
பணநாயகம் அழிந்து ஜனநாயகம் காக்கப்படும்.
மலரட்டும் புதிய பாரதம்!
9 of 21
Voting Tamil quote

ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை
கையில் எடுத்தால் தவறில்லை.
கையில் எடுக்கும் சர்வாதிகாரம்
ஜனநாயகத்தை பாதிக்குமே
ஆனால் அது 100% தவறு தான்.
10 of 21
Democracy tamil quote

பணத்துக்காக உடலை விற்பது
விபச்சாரம் என்றால்,
பணத்துக்காக நாட்டை விற்பதும்
விபச்சாரம் தானே!
11 of 21
Prostition Tamil Quote

ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும்
ஒருமுறை ஓட்டுபோடுவதன்
நோக்கம் நல்லாட்சி மட்டுமே.
அவர்கள் கொடுக்கும் ₹000 அல்ல.
12 of 21
Vote tamil quote

உன் நன்றி விசுவாசத்தை ஓட்டுக்கு
பணம் கொடுத்தவனிடம் காட்டாதே.
அவன் கொடுத்தது உன் பணம் தான்.
இனி அவன் சம்பாதிக்க போவதும் உன் பணம் தான்.
13 of 21
Voters tamil Quote

அரசு ஏற்றும் சட்டமும் திட்டமும்
5% மக்களுக்கு மட்டுமே சாதகமாக
அமைந்தால், அது மக்களுக்கான
அரசும் இல்லை! மக்களாட்சியும் இல்லை!
14 of 21
Government tamil quote

மக்கள் நலன் விரும்பும்
எந்த ஒரு அரசும்
மக்களுக்கு எதிராக
செயல்படுவதில்லை.
15 of 21
Government Tamil Quote


மக்களுக்கு எதிராக செயல்படும்
யாராக இருந்தாலும்,
அவர்கள் பெயர் மக்கள் மனதிலும்,
வரலாற்றில் சுவடிலும்,
"துரோகி" என்றே பொறிக்கப்படும்.
வெறும் "துரோகி" இல்லை "பச்சை துரோகி".
16 of 21
Political tamil quote

ஏழையை அழிப்பது வளர்ச்சியா?
ஏழ்மையை ஒழிப்பது வளர்ச்சியா?
ஏழ்மையை ஒழிங்கடா முதலில்.
இல்லை முயற்சியாவது செய்ங்கடா.
17 of 21
Tamil social Quote

அரசியல் என்பது தன் நாட்டு மக்களை
காத்து வளர்த்து வாழ வைப்பது.
தன் வீட்டு மக்களை வாழ
வைப்பது அல்ல.
18 of 21
Politics quote in tamil

துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்கு கவலை கொள்ளாதே.
நீ வைத்த நம்பிக்கை தான்
உனக்கு காட்டிக் கொடுத்தது.
துரோகியை, துரோகத்தின் வலியை.
இனி கற்றது போதும், பட்டது போதும்,
விழித்துக் கொள் நண்பா!
19 of 21
Tamil social Quote

மக்கள் துயர் கண்டு
கொதிப்பவன் மக்களில் ஒருவன்.
அவனை காப்பதும் வளர்ப்பதும்
நம் மக்களின் கடமை.
20 of 21
Political tamil quote

அரசியல் என்பது ஒரு தியாகம்.
அரசியல் என்பது மக்கள் சேவை.
தூய அரசியல் என்பது
தன்னலம் விரும்பா நிலை.
21 of 21
அரசியல் கவிதை

வலிகளில் பிறந்த வரிகள்.
கூகுளே துணை!

Related Posts

0 Comments to "21 சமூக சிந்தனைகள் | அரசியல் சிந்தனைகள்"

Post a Comment

Thanks For Your Comment...