வாழ்க்கையே இருண்டு போன பிறகும்
இன்னும் இவன் எப்படி உயிர்
வாழ்கிறான் என்று சிந்திக்கிறாயா?
காரணம் சொல்கிறேன் கேள்...!
என்னை விட்டு சென்றது நீ தான்.
உன் நினைவுகள் அல்ல...!
Sad Love Quotes In Tamil
வான் பருந்து போல் அவள்
பறந்து போனாளே.
என் வான் கனவு
அனைத்தையும் சுருட்டி,
எனை தனியே தவிக்க வைத்து,
மேகத்தின் உள் மறைந்து போனாளே.
நீ பேசினாலும் வலிக்கிறது,
நீ பேசாவிட்டாலும் வலிக்கிறது.
இரண்டும் அற்ற நிலையில்
இதயம் கிடந்து துடிக்கிறது💗...!
காதல் அது எப்பொழுதுமே இன்பமானது.
அதனால் தான் கண்ணீரும் சொந்தமானது.
காதல் பிரிவு எப்பொழுதுமே துன்பமானது.
அதனால் தான் புன்னகையும் கம்மியானது.
இதயத்தை சுக்கு நீராக சிதைந்து
செல்கிறது உன் நினைவுகள்.
இன்று நீ என்னை பிரிந்தாலும், மறந்தாலும்,
காலம் என் அன்பை உணர்த்தும் போது,
நான் இருப்பேன் உன் கண்களில் கண்ணீராக.
எங்கே போனாய் என் அன்பே
என்னை தவிக்கவிட்டு.
இங்கே நானும் வாழுகிறேன்
தினமும் உள்ளங்கெட்டு.
மூங்கில் அமைதியாகவே இருக்கும்
அதன் துளை தேடி காற்று போகும் வரை.
நானும் அமைதியாகவே இருந்தேன்.
தேடிவந்து மீட்டி விட்டு தனியே
ஏங்க வைத்து சென்று விட்டாய் அடி நீ.
உயிர் என நினைத்த இதயத்தின்
பிரிவு வலியை கொடுக்கிறது.
அது காட்டிய அன்பு பொய் என்பது
மரண வலியை கொடுக்கிறது.
உன்னை வழி அனுப்ப வில்லை.
வலியுடன் அனுப்பி வைக்கிறேன்.
என் இதயத்தை பத்திரமாக
பார்த்துக் கொள்.
பௌர்ணமி நிலவாக இருந்த
என் வாழ்க்கை, நீ இல்லாமல்
அமாவாசை இருளாக போகும்
இடம் அறியாது தடுமாறுகிறது.
வந்து விடு இல்லை கொன்று விடு.
அன்று:
நான் பின் தொடர்ந்தேன் உன்னை.
இன்று:
நீ தந்த வலியும், உன் நினைவு தரும்
வலியும் பின்தொடர்கிறது என்னை.
அன்பே அழுகின்றேன்!
கண்களில் நீருமில்லை. சிரிக்கின்றேன்!
சிரிப்பில் அர்த்தமில்லை.
சுவாசிக்கின்றேன்!
சுவாசத்தில் ஜீவனில்லை.
பேசுகின்றேன்!
பேச்சில் அரத்தமில்லை.
உன் காதல் தந்து சென்ற
பரிசுகள் இவை அனைத்தும்.
பிரிந்து சென்ற காதலிகளுக்கு தெரியாது.
அவர்கள் சூடிவிட்டு எரிந்த ரோஜாக்கள் கூட,
இன்னும் பத்திரமாக பாதுகாக்க படுகிறது என்று.
காதலை மணலில் கிறுக்கி
இருந்தால் அழித்திருப்பேன்.
மனதில் அல்லவா கிறுக்கி விட்டேன்.
மரணம் வரை தினம் மரணத்தை தருமே!
எனக்கு பிடித்தது போல்
உன்னை படைத்த இறைவன்.
ஏனோ எனக்கு கிடைக்காதது
போல் எழுதி விட்டான் உன்னை.
Thanks For Your Comment...