21 காலை வணக்கம் தன்னம்பிக்கை கவிதை வரிகள்
Saturday, February 13, 2021
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும்,
அந்த பிரச்சனை வரும் போது,
அதை தாங்கும் வலிமையும், அதற்கான வழியும்,
அதன் கூடவே வந்து விடும்.
எனவே எவனா இருந்தால் என்ன,
எமனா இருந்தால் என்ன என்று
கடந்து சென்று கொண்டே
இருப்போம். இலக்கை நோக்கி.
1 of 21
வெற்றி என்பது துரும்பை பிடித்து,
அதை வாய்ப்பாக பயன்படுத்தி,
பின் அதை வெற்றியாக
மாற்றி வெற்றி வாகைசூடுவது.
2 of 21
நீங்கள் நம்பிக்கையை தூக்கி சுமந்தால்,
நீங்கள் கீழே விழும்போது
நீங்கள் தூக்கி சுமந்த நம்பிக்கை
உங்களை தூக்கி சுமக்கும்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
3 of 21
ஒவ்வொரு கதவு மூடப்படும் போதும்
மற்றொரு கதவு திறக்கும்.
மூடிய கதவை பார்த்துக் கொண்டு இருந்தால்
திறக்கும் கதவு தெரியாது.
சில கதவை திறக்க முயற்சி அவசியம்.
சில கதவை திறக்க பொறுமை அவசியம்.
எந்த கதவையும் திறக்க தன்னம்பிக்கை அவசியம்.
4 of 21
உன் எண்ணமும், முயற்சியும்,
வேலை பார்ப்பதற்க்காக இல்லாமல்,
வேலை கொடுப்பதற்க்காக இருக்கட்டும்!
💗👍🕴️நம் வாழ்க்கை சிறக்க!🕴️👍💗
பிறர் வாழ்க்கையை சிறக்கவைக்க!
5 of 21
தன்னந்தனியாக உயரே பறக்கும்
பறவைக்கு இருக்கும் நம்பிக்கை!
உன்மீது உனக்கு இருந்தால்
நீயும் உயரலாம்! உலகையும் ஆளலாம்!
6 of 21
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றி மறையாமல் இருந்தால்,
சாதிக்கும் வழிகள் தானே பிறக்கும்.
எண்ணம் போல் வாழ்க்கை!
7 of 21
தோல்வி மட்டுமே வாழ்க்கை ஆனால்,
தோற்க்கத் தான் பிறந்தோமோ!
என்று கலங்காதே. தோற்ப்பதாக
இருந்தால், கருவிலேயே கலைந்து
கல்லறை ஆகி இருப்போம்.
ஜெயித்து பிறந்தோம்! ஜெயிக்க பிறந்தோம்.
8 of 21
தன்னம்பிக்கை மற்றும் முயற்சி
உள்ளவனை, புதைத்து
மிதித்தாலும் விதையாக மாறி
முளைத்து நிற்ப்பான் "மரமாக".
9 of 21
சிகரம் ஏறினால் சிரமம் வரும்.
சிரமம் தாங்கினால்
உயரம் உன் வசமாகும்.
கால்களே நடை எடு.
கல்லோ முள்ளோ தடை பொறு.
10 of 21
நண்பா!
கனவெல்லாம் நனவாகும் ஓர் நாள்.
உன் நம்பிக்கையை மூலதனமாக கொண்டு,
முயற்சியை முதலீடாக கொண்டு நீ போராடு,
எமனே வந்து தடுத்தாலும் ஏறி மிதித்து நீ முன்னேறு.
11 of 21
ஜெயிப்பது எப்படி என்று
சிந்திப்பதை விட்டுவிட்டு.
தோற்றது ஏன் என்று
சிந்தித்துப் பார்.
பிறகு நீ தான் ராஜா.
12 of 21
நாளும் நேரமும் கடந்து கொண்டே இருக்கிறது.
ஆதலால் முயற்சி நடந்து கொண்டே இருக்கட்டும்.
வெற்றி அதன் நேரத்தில் வந்தே தீரும்,
யார் தடுத்தாலும். முயற்சி தொடர்ந்தால்.!
13 of 21
நமக்கு முன்னாடி எவ்வளவு பெரிய சமுத்திரம்
இருக்கிறது என்று கவலை கொள்ளாமல்.
அதுக்கு முன்னாடி நான் மட்டும்
தனியா தில்லா தைரியமா நிற்க்கிறேன்
என்று எண்ணி பெருமைபடு நண்பா.
14 of 21
தோற்றுவிட்டோம் என்று தெரிந்தாலும்,
போராடுவதை விட்டுவிடாதே.
அதுவே வெற்றி பெற கடைசி வழியும் வாய்ப்பும் நண்பா.
15 of 21
தைரியமாக இரு நண்பா.
உனக்காக எதுவும் இல்லை,
யாரும் இல்லை, என்ற நிலை வந்தாலும்,
உனக்காக நான் இருப்பேன்.
இப்படிக்கு: நான் உன் தன்னம்பிக்கை.
16 of 21
எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையே
முடிந்து விட்டது என்று எண்ணி விடாதே.
உனக்கு உதவ யாரோ ஒருவர் தயாராக இருப்பார்.
நீ செல்ல ஏதோ ஒரு வழி புதிதாக தோன்றும்.
இவை இரண்டும் இல்லை என்றால்,
இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு,
தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும் காத்திரு.
காலம் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டிப்பாக
கொண்டு வந்து தந்தே தீரும்.
17 of 21
நாம் நம் இலக்கை நோக்கிய பயணத்தில்,
கவனமாக இருந்தால் போதும்.
கல் எறிபவர் ஓய்ந்து போவர்.
இல்லை நம் வெற்றியை நம்முடன்
கொண்டாடிட நம் நண்பர்கள் ஆகிவிடுவர்.
18 of 21
மீண்டும் மீண்டும் தோல்வி வரும், துவண்டு விடாதே.
உலகமே உன்னை கைகொட்டி சிரிக்கும்,
கவலை கொள்ளாதே.
ஒருமுறை வென்ற பின் திரும்பி பார்,
கைகொட்டி சிரித்தவனும் கைதட்டி ரசிப்பான்.
நீ உன் இலக்கை நோக்கி சரியான திசையில்,
சரியான வழியில் பயணம் செய்.
உலகம் ஆயிரம் சொல்லும்,
செவிமடுக்க தேவையே இல்லை.
உன்னை நீ அறிந்து புரிந்து தெளிந்து
கொண்டால் மட்டும் போதும்.
உலகம் உன் வெற்றிக்கு பின்
அறிந்து புரிந்து தெளிந்து கொள்ளட்டும்.
19 of 21
ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது
உன் ஆழ்மன எண்ணமாக இருந்தால்.
யார் எது சொன்னாலும் தேவையானதை
மட்டும் எடுத்துக் கொண்டு,
தேவை இல்லாததை விட்டு விட்டு,
சாதனையை நோக்கி பயணம் செய்.
20 of 21
உன் உயிராக கொண்டால்,
விதியும், சதியும் உன் காலடியில்.
உன் மதி கொண்டு உன் விதியை
நீயே எழுதிடு நண்பா.
21 of 21
0 Comments to "21 காலை வணக்கம் தன்னம்பிக்கை கவிதை வரிகள்"
Post a Comment
Thanks For Your Comment...