காதல் - வாழ்க்கை - சோகக் கவிதை ஸ்டேட்டஸ்

காதல் சோகக் கவிதைகள்

உன்னுடன் அழகிய தருணங்களை
அனுபவிக்கும் போது
தெரியவில்லை.
அந்த அழகிய தருணங்கள்
பின்னாளில் அழவைக்கும் என்று.
1 of 18
Tamil sad love quote

விரும்புவதும் காதல் தான்,
விரும்பியவர் நலனுக்காக,
விரும்பி விலகுவதும் காதல் தான்.
💔ஐ மிஸ் யூ மை டியர்💔
2 of 18
Tamil sad love status

காலம் முழுவதும் காதலோடு
காத்திருப்பேன் என் அன்பே!
காகிதத்தில் கிறுக்கிய கனவாய் அல்ல
கல்வெட்டுகளில் செதுக்கிய சுவடுகளாய்.
3 of 18
காதல் ஸ்டேட்டஸ்

மறந்து விடு என்று
நீ சொல்லி சென்றது,
இறந்து விடு என்றே
கேட்கிறது எனக்கு💔.
4 of 18
Sad tamil love status

தூக்கம் இல்லா என் விழியில்,
துக்கமே மிச்சமாய் கிடக்கிறது.
வந்து விடு இல்லை கொன்று விடு.
5 of 18
Sad Tamil Love Status

நீ என்ன தான் என்னை பிரிந்தாலும்,
இந்த முட்டாள் இதயத்தின் பட்டா,
உன் பெயரில் தான் உள்ளது.
மரணம் வரும் வரை இல்லை,
மரணத்தை நான் தேடும் வரை அதுவே.
6 of 18
Tamil sad love quote

சில உறவுகள் பிரிந்து செல்லும் போது,
இதயத்தில் கூர் ஆணி கொண்டு
எழுதி செல்கின்றனர்.
"மடையா உன் வாழ்க்கையை உனக்காக வாழ்" என்று.
7 of 18
Soga Kavithai

புள்ளிகளே இல்லாமல்
தொடரும் கவிதைகள்
என் கண்ணீரும்
என் வாழ்க்கையும்.
நீ எனை பிரிந்த பின்,
எதை நோக்கிய பயணம்
என தெரியாது கண்ணீருடன்
தொடர்கிறது என் வாழ்க்கை.
8 of 18
Tamil sad kadhal kavithaikal

மீண்டும் ஒருவரை அன்பு செய்வதில்
பிரச்சினை எனக்கில்லை.
ஆனால், பழைய காயங்கள் காயாமல்
இருப்பதால் மனது தயங்கி நிற்க்கிறது.
9 of 18
Sad Love Quote in tamil

நீ என் காதலை மறுத்த அந்த நொடியே
இதயம் கல்லறைக்கு சென்று விட்டது.
மூச்சு மட்டும் பேச்சுக்காக வந்து செல்கிறது.
தேடிக் கொண்டு இருக்கிறேன் உன்னை.
ஒருமுறை வந்து விட்டு போ
இல்லை கொன்று விட்டு போ.
10 of 18
Sad love quote tamil

என்னை முழுவதுமாய்
படித்தவளும் நீ தான்.
என்னை முழுவதுமாய்
கிழித்து எரிந்தவளும் நீ தான்.
11 of 18
Tamil love sad quote

தூக்கத்திலாவது உன்னை மறக்கலாம்
என்று எண்ணி கண் மூடுகிறேன்.
தூங்குவதாக நினைக்க மட்டுமே
முடிகிறது. மறக்க முடியவில்லை.
மரணம் வரும் காலம் தான் நான்
உன்னை மறக்கும் காலம் போலும்.
12 of 18
Tamil Kadhal soga kavithai

காதல் பிறந்து வந்த வரிகள் அல்ல.
காதல் இறந்து வந்த வலிகள் இவை.
கண்ணீரை மையாய்
கொண்டு எழுதியதல்ல.
இரத்தத்தை மையாய் கொண்டு எழுதியது.
13 of 18
Kadhal tholvi kavithai

காலம் முழுவதும் என் கரம் பிடித்து
தொடர்வாள் என்று நினைத்தேன்.
ஆனால், அவளோ என் கரத்தால்
பேனாவை பிடிக்க வைத்து
தொடர்கிறாள் கண்ணீர் கவிதையாக.
14 of 18
Tamil Kadhal tholvi status

வாாழ்க்கை சோகக் கவிதைகள்

இறை தேடும் பறவையாய்
விடை தேடி அழைகிறேன்.
கானல் நீராய் மறைந்து போனது
என் வாழ்க்கை.
இருண்டு போன எதிர்கால கனவுகள்
ஏதோ ஓர் இடத்தில் தவறியெனினும்
கிடைத்திடாதா என்ற ஏக்கத்தில் நான்.
15 of 18
Valkkai Soga Kavithai

இருக்கும் இடத்தில் இல்லாத ஒன்றை,
கிடைக்காது என்று தெரிந்தும்
தேடும் ஏமாளி நான்.
16 of 18
Sad Tamil status

என் விதியை எழுதும் போது அடித்து
அடித்து எழுதி இருப்பான் போலும்.
அவன் அடித்து எழுதிய ஒவ்வொரு
வரிகளும் அடியாக, இடியாக, வலியாக,
என் வாழ்க்கையில் ரணங்களாய்.
எத்தனை எத்தனை அடிகளடா வாழ்க்கையில்.
17 of 18
Tamil sad Life Quote

விழியோரம் கண்ணீர்!
மனதில் ஏதோ ஒரு வலி!
உதடுகளில் போலி சிரிப்பு!
இது தான் இங்கு என் வாழ்க்கை!
18 of 18

Related Posts

0 Comments to "காதல் - வாழ்க்கை - சோகக் கவிதை ஸ்டேட்டஸ்"

Post a Comment

Thanks For Your Comment...