Type Here to Get Search Results !

37 சீமான் பொன்மொழிகள் | Seeman Quotes In Tamil

Lost Edit: 26/07/22

நீ என்ன படித்தாலும் எவ்வளவு
கல்வியறிவு பெற்றிருந்தாலும்,
உன் தாய் மொழி தெரியவில்லை
என்றால் நீ முட்டாள் தான்.
- சீமான்
1 of 37
Naam thamilar seeman ponmoligal

இந்த உலகத்தில் வர்த்தகம் நடக்கவில்லை.
வர்த்தகமே உலகமாகி விட்டது.
இவர்களை பொருத்தவரை மக்கள் என்பவர்,
இவர்கள் விற்கும் பொருட்களை வாங்கும்
உயிர் உள்ள பொருள்.
- சீமான்
2 of 37
Seeman quotes

அதிகாரம் அயோக்கியர்களிடம் இருந்தால்.
அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் தான்.
- சீமான்
3 of 37
senthamizhan seeman quotes

நீ பிறரின் உரிமைக்கு
துணை நிற்கும் போது தான்,
உன் உரிமை பாதுகாக்கப்படும்..!
- சீமான்
4 of 37
Seeman quotes

மண்ணை காப்பாற்றாது
மண்ணை வாழவைக்காது
அதில் வாழ்கின்ற மனிதனை
வாழ வைக்க முடியாது.
- சீமான்
5 of 37
Seeman quotes in tamil


எதிர்ப்புகளோடு
வளர்பவர்களும்,
ஆபத்துக்களோடு
வாழ்பவர்களும் தான்
அசாத்திய துணிச்சலை
வளர்த்துக்கொள்கிறார்கள்.
- சீமான்
6 of 37
Seeman quotes

காயம் அடையாமல் கனவை
நனவாக்கிட முடியாது,
இரத்தம் வழியாமல் போரில்
வெற்றிக் கொள்ள முடியாது.
- சீமான்
7 of 37
சீமான் தத்துவம்


அடிபட்ட புலியும்,
அடிமைப்பட்ட மக்களும்
எழுச்சி கொண்டால் யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது...!
- சீமான்
8 of 37
Seeman quotes in tamil

நமக்கென்று காலம் கனியும்.
அதுவரை நாம் நீராக இருக்க வேண்டிய
இடத்தில் நீராக இருப்போம்.
நெருப்பாக இருக்க வேண்டிய
இடத்தில் நெருப்பாக இருப்போம்.
- சீமான்
9 of 37
Seeman quotes

படித்தவர்கள் இருந்து பயில்கிற நூலகம்
எப்படி அமைதியாக இருக்குமோ?
அப்படி, கற்றவர்கள் அதிகாரத்திற்கு வரும் போது
இந்த நாடும் அமைதியாக இருக்கும்..!
- சீமான் 
10 of 37
Seeman quotes


என் மொழி புரியாதவன் எனக்கு
இறைவனாக இருக்க முடியாது.
என் வலி உணராதவன் எனக்கு
தலைவனாக இருக்க முடியாது.
என் வரலாறு தெரியாதவன்
எனக்கு வழிகாட்ட முடியாது.
- சீமான்
11 of 37
Seeman quotes

அரசியல் என்பது அனைத்து
உயிர்களுக்குமான தேவையும்,
அதை நிறைவு செய்யும்
சேவையும் தான்..!
- சீமான்
12 of 37
Tamil seeman quotes

பேரன்பு கொண்டு இந்த தேசத்தை
நேசிப்பதால் தான், இங்கு நடக்கும்
அநீதிகளை கண்டு எனக்கு
கோபம் வருகிறது.
- சீமான்
13 of 37
Seeman quotes

உலகத்திலேயே மிக கொடுமையான
வலியை தரும் ஒன்று..!!
எந்த மக்களுக்காக எல்லாவற்றையும்
இழந்து நின்று போராடுகிறோமோ,
அந்த மக்களாலேயே விமர்சிக்க
படுவதும் வீழ்த்தப்படுவதும் தான்...!
- சீமான்
14 of 37
Seeman quote


'நாம் தமிழர்' என்பது கட்சியின் பெயரல்ல,
நாம் பிறந்த பெருமைமிக்க இனத்தின் அடையாளம்!
ஒரு கட்சியை ஆரம்பித்து நாம் இணையவில்லை,
நாமெல்லாம் இணைந்து நம் இனத்தின் விடுதலைக்காக
ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!
- சீமான் 
15 of 37
சீமான் பொன்மொழிகள்

துணிவோடு இருங்கள்.
நம்பிக்கையோடு இருங்கள்.
நமக்கான காலத்தை நாமே உருவாக்குவோம்.
- சீமான்
16 of 37

நீ மடக்கியும் ஒடுக்கியும் வைக்க
நாங்கள் குடை இல்லை.
மானத் தமிழர் படை.
- சீமான்
17 of 37

உடலினை உறுதி செய்.
அறிவை விரிவாக்கு.
கொள்கை வகுத்து நில்.
கூடிச் செயல் செய்ய பழகு.
நாம் தமிழர்.
- சீமான்
18 of 37


ஒரு விவசாயி இறந்தால் அது செய்தி அல்ல,
நாளை நாம் உணவு இல்லாமல்
சாகப் போகிறோம் என்பதற்கான முன் அறிவிப்பு.
- சீமான்
19 of 37

ஒரு விவசாயி ஒரு நாட்டில்
வாழ்கிறான் வளர்கிறான் என்றால்,
அந்த நாடு வாழ்கிறது வளர்கிறது.
ஒரு நாட்டில் ஒரு விவசாயி வாழ
முடியாமல் சாகிறான் என்றால்
அது நாடு இல்லை சுடுகாடு.
- சீமான்
20 of 37

உலகத்தில் உயர்ந்தவன் ஒருவன் தான்.
உழுது, விதைத்து, அறுத்து,
உலகத்துக்கே சோறு போடுபவன் தான்
உலகத்திலேயே உயர்ந்தவன்.
- சீமான்
21 of 37
Seeman quote in tamil

வென்றாலும் தோற்றாலும்,
இரண்டையும் சமமாக கருதி களத்திலே
தொடர்ந்து நிற்பவன் தான் தலைவன்.
அவன் தான் சரியான வீரன்.
22 of 37
தலைவன் யார்

மரம் உன்னை வாழவைக்கும்.
செடி உன்னை வாழவைக்கும்.
கடல் உன்னை வாழவைக்கும்.
சூரிய ஒளி உன்னை வாழவைக்கும்.
காற்று உன்னை வாழவைக்கும்.
நீர் உன்னை வாழவைக்கும்.
நிலம் உன்னை வாழவைக்கும்.
அதன் வளம் உன்னை வாழவைக்கும்.
மண்புழு கூட உன்னை வாழவைக்கும்.
மதமும் ஜாதியும் உன்னை ஒருபோதும் வாழவைக்காது.
- சீமான்
23 of 37
சீமான் பொன்மொழி

நாங்கள் வாக்குக்காக
வந்தவர்களே அல்ல,
எதிர்கால எம் இனத்தின்
தலைமுறை பிள்ளைகளின்
வாழ்க்கைக்காக வந்தவர்கள்.
- சீமான்
24 of 37
Seeman Ponmozhigal


கல்வி
மானிட உரிமை
அதை
கொடுக்க வேண்டியது
அரசின் கடமை.
அதை
கொடுக்க மறுப்பது
மாபெரும் கொடுமை.
25 of 37
சீமான் கவிதை

அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த
தேர்தலை பற்றிதான் சிந்திப்பார்கள்.
தலைவர்கள் மட்டும் தான் அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள்.
26 of 37
Thalaivan Kavithai

புதியதோர் தேசம் செய்வோம்.
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்.
புரட்சி எப்போதும் வெல்லும்.
நாளை உங்கள் பிள்ளைகளின் வெற்றி
அதை சொல்லும்.
எங்கள் இலக்கு ஒன்று தான்.
அது என் இனத்தின் விடுதலை.
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
மாறுவோம் மாற்றுவோம்!
27 of 37
சீமான் கொள்கை

உலகத்தின் எம்மொழியும் கற்போம்
நாங்கள் வாழ.
எம்மொழி தமிழ் கற்போம்
எங்கள் இனம் வாழ.
28 of 37
சீமான் பொன்மொழி

ஒருவர் பத்தாவோம்! பத்து நூறாவோம்!
பகைவர் நடுங்கும் படையாவோம்!
திரள்வோம்! திரள்வோம்!
பகை மிரளத்திரள்வோம் பைந்தமிழ் இனத்தீரே!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
இலக்கு ஒன்றுதான்! அது நம் இனத்தின் விடுதலை!
29 of 37
மொழி பற்று இன பற்று கவிதை

அரசியல் என்பது மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க. - சீமான்
30 of 37
Seeman Quote Tamil


வாழும் உரிமை இங்கு எவர்க்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. - சீமான்
31 of 37
Seeman Quote Image Tamil


வந்தவரை எல்லாம் வாழ வைப்போம், அது எம்மினத்தின் பெருமை. இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். அது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை. - சீமான்
32 of 37
சீமான் பொன்மொழிகள்



அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும், குடிநீரும், வியாபார பண்டம் ஆகிவிட்ட நாடு, நாடு அல்ல அது சுடுகாடு, அது நரகம். - சீமான்
33 of 37
Seeman status tamil


என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி.
34 of 37
Seeman Quote Image Tamil

அறியாமையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போதிக்கலாம்! பொறாமையில் பேசுபவனுக்கு என்ன கற்பித்தாலும் புரியாது!
35 of 37
Seeman Quote

அதிபயங்கரவாதிகள் நாட்டை ஆளும் போது, மக்கள் எல்லாம் பயங்கரவாதியாகத் தான் தெரியும்!
36 of 37
நாடு கவிதை

காலம் வரும் என்று காத்திருந்த தலைவனின் பிள்ளைகள் அல்ல நாங்கள்! காலத்தை உருவாக்கிய தலைவனின் பிள்ளைகள் நாங்கள்!
37 of 37
சீமான் சிந்தனை ஸ்டேட்டஸ்

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad